சனிக்கிழமை, ஜூன் 22, 2024
சனிக்கிழமை, ஜூன் 22, 2024

HomeFact Checkநீட் தேர்வு கொண்டு வந்ததே திமுகதான் என்று பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை என்ன?

நீட் தேர்வு கொண்டு வந்ததே திமுகதான் என்று பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

நீட் தேர்வு கொண்டு வந்ததே நாங்கள்தான் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Twitter @Butter_buiscut

“நீட் தேர்வு கொண்டு வந்ததே நாங்க தான் : ஸ்டாலின் . உண்மைய பேசறவங்க தெய்வத்துக்கு சமம்.” என்கிற பதிவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு குறித்து “திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்தபோதுதான் மத்தியிலே இந்த நீட் தேர்வு கொண்டுவரவேண்டும் என்று முடிவெடுத்தார்கள்; மறுக்கவில்லை” என்று பேசும் சிறிய வீடியோ ஒன்று அதனுடன் பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலையை புகழும் சுவர் விளம்பரத்தில் எழுத்துப்பிழை இருப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Fact Check / Verification

நீட் தேர்வு கொண்டு வந்ததே நாங்கள்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். எனினும், அதில் சரியான பதிவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து கீ-வேர்டுகள் மற்றும் வருடவாரியாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மேடைப்பேச்சுகளை ஆராய்ந்தபோது கடந்த ஜூலை 21, 2019ஆம் ஆண்டு News Clock 24×7 என்கிற யூடியூப் பக்கத்தில் “MK Stalin praises Thanga Tamil Selvan | தங்க தமிழ்ச்செல்வனை புகழ்ந்து தள்ளிய மு.க.ஸ்டாலின்” என்கிற தலைப்பில் வைரல் வீடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்த காட்சி நமக்குக் கிடைத்தது.

மேலும், தேடலில் கடந்த ஜூலை 21, 2019 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலினே தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ”தேனி மாவட்டத்தில், மாற்றுக்கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் எனது உரை.” என்று இந்த வீடியோவின் முழுமையான பதிவைப் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், “திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோதுதான் மத்தியில் நீட் தேர்வு கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்; மறுக்கவில்லை. அன்றைக்கு குஜராத் மாநில முதல்வராக இருந்த இன்றைய பிரதமர் மோடி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதைக் கண்டித்தார்.

அதே போன்று, தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை உத்திரவு பெற்றார். கலைஞர் முதல்வராக இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழையாமல் பார்த்துக் கொண்டார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அம்மையார் ஜெயலலிதா முதல்வராக இருந்தபொழுது கூட நீட் தேர்வு தமிழகத்திற்குள் வரவில்லை.

ஆயிரம்தான் அவரை சர்வாதிகாரி என்று நான் குறிப்பிட்டாலும் கூட மத்திய அரசை கண்டிக்க வேண்டிய நேரத்தில் அவர் கண்டித்தது உண்மை; நான் மறுக்கவில்லை. அவர் இருந்தவரையில் வந்துள்ளதா நீட் பிரச்சினை? எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் வந்து அமர்ந்திருக்கின்ற வேளையில் இந்த பிரச்சினை வருகிறது என்றால் என்ன காரணம்? இந்த லட்சணத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நேரத்தில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கிறார்கள் நீட் தேர்வை தடுக்க அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இன்று நீட் தேர்வு வந்ததுடன் மருத்துவராக சென்று அமரவும் ஒரு தேர்வைக் கொண்டு வந்து இருக்கிறார்கள்.” என்பதாகப் பேசியிருக்கிறார். இந்த வீடியோவையே கட் செய்து தற்போது பரப்பி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஜூலை 23, 2013 அன்று ‘முரசொலி’ நாளிதழில் “நுழைவுத்தேர்வு எந்தவிதத்தில் வந்தாலும் அதனை எதிர்ப்பேன்” என்று எழுதியுள்ளார்.

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவும் கடந்த 2016 ஆம் ஆண்டு, ”மருத்துவ நுழைவுத்தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு முழுவதுமாக விலக்களிக்க நடவடிக்கை தேவை” என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக டி.ஆர் பாலு குறித்து தவறான செய்தி பரப்பும் அண்ணாமலை!

Conclusion

நீட் தேர்வு கொண்டு வந்ததே நாங்கள்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பரவுகின்ற வீடியோ முழுமையானதல்ல என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources
Facebook Post From, M.K.Stalin, Dated July 21, 2019
YouTube Video From, News Clock 24×7, Dated July 21, 2019
Image From, ABP, Dated September 13, 2021
Report From, Kalaignar Seithigal, Dated February 02, 2022
YouTube Video From, Dinamalar, Dated May 25, 2016


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular