வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckFact Check: கேஜிஎஃப் நடிகர் யாஷ் மீது அப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பாலியல்...

Fact Check: கேஜிஎஃப் நடிகர் யாஷ் மீது அப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பாலியல் புகார் கூறினாரா?உண்மை என்ன?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
“நடிகர் யாஷ் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்” – நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி

Fact
வைரலாகும் செய்தி போலியானது என்று ஸ்ரீநிதி ஷெட்டி தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

கேஜிஎஃப் நடிகர் யாஷ் மீது அப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பாலியல் புகார் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”இன்னும் ஒரு அம்பது வருஷம் கழிச்சு சொன்னா பெட்டர்! சூப்பர் ஹிட் படத்துல நடிச்சும் அம்மணிக்கு ஒண்ணும் புதுசாவரல போல! அந்த காண்டுல மீடூ மோடுல போயிடுச்சு! படத்த பாத்தாலே தெரியும் அந்த அம்மணிக்கும் நடிப்புக்கும் சம்பந்தமே இல்லன்னு!!” என்று சமூக வலைத்தளத்தில் “நடிகர் யாஷ் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்” என்கிற தலைப்பிட்ட செய்தியை ஒருவர் ஷேர் செய்துள்ளார். குறிப்பிட்ட செய்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Screenshot from Facebook/srinivasan.thothathri.3

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: சின்னத்திரை தொகுப்பாளர் மணிமேகலை திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாகப் பரவும் வதந்தி!

Fact Check/Verification

கேஜிஎஃப் நடிகர் யாஷ் மீது அப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பாலியல் புகார் கூறியதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

“நடிகர் யாஷ் என்னிடம் தவறாக நடந்து கொண்டார்.! கே ஜி எஃப் நடிகை பரபரப்பு தகவல்.” என்று தலைப்பிட்ட செய்தியை ஆராய்ந்தோம். தலைப்பில் இவ்வாறு பதிவிட்டுள்ள அச்செய்தி இணையதளம், செய்திக் கட்டுரையின் உள்ளே நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இது ஒரு வதந்தி என்று அளித்த விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட செய்தியின் தலைப்பை மட்டும் பார்த்து பலரும் இதனைப் பதிவிட்டு வருகின்றனர் என்பது தெளிவாகியது.

Screenshot From Facebook/tamil360newz

தொடர்ந்து, ஸ்ரீநித் ஷெட்டியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பார்வையிட்டபோது, “சமூக வலைத்தளத்தை அன்பு, மகிழ்ச்சியை பகிரப் பயன்படுத்துங்கள். இதுபோன்ற பொய்யான தகவல்களை பகிர பயன்படுத்தாதீர்கள். நடிகர் யாஷ் ஒரு உண்மையான நற்பண்புகள் கொண்ட மனிதர். எனக்கு ஒரு நல்ல நண்பர், நல்ல ஆலோசகர். நான் எப்போதும் உங்களுடைய ரசிகைதான்.” என்று பதிவிட்டுள்ளார்.

Also Read: மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!

Conclusion

கேஜிஎஃப் நடிகர் யாஷ் மீது அப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பாலியல் புகார் கூறியதாகப் பரவும் தகவல் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post from, Srinidhi Shetty, March 16, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular