ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact CheckViralமாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!

மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருவதாக பரவும் வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளை கல்விக்கு நிதி உதவி தருகின்றது

Fact: வைரலாகும் தகவல் தவறானதாகும்

நியூஸ்செக்கரின்  வாட்ஸ்ஆப் டிப்லைனில் (9999499044) வாசகர் ஒருவர் செய்தி ஒன்றை அனுப்பி அதன் உண்மைத்தனமை குறித்து கேட்டிருந்தார். அந்த செய்தியில் இருந்ததாவது,

மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு

இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை…
.
Admission Help line – 9150330111

அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்.
.
தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
.
170க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
+2 தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புக்கான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE படிப்பில் சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரிகளில் படிப்புக்கான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000 மட்டுமே
தொடர்புக்கு : 9150330111
.
1. B.E Mechanical Engineering,
2. B.E Electrical & Electronics Engineering
3. B.E Electronics & Communication Engineering

4. B.E Computer Science Engineering.
5. B.E Civil Engineering.
6. B.E Aeronautical Engineering

7. B.E Mechanical & Automation Engineering
8. B.E Electronic & Instrumentation Engineering
9. B.E Mechanical
Engineering (Sandwich)

10. B.E Robotics
11. B.Tech Information Technology
.
இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா? எனவே பகிருங்கள் நண்பர்களே. Kindly forward to all groups

Universe கல்வி அறக்கட்டளை
முன்பதிவிற்கு அழைக்கவும்,  9150330111

சமூக ஊடகங்களில் தேடுகையில் பலரும் இதே தகவலை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

மாஃபா பாண்டியராஜன் பெயரில் இயங்கும் அறக்கட்டளையில் கல்விக்கு நிதி உதவி தருவதாக வைரலாகும் தகவல்
Screengrab from Facebook/DigitalMuni
மாஃபா பாண்டியராஜன் பெயரில் இயங்கும் அறக்கட்டளையில் கல்விக்கு நிதி உதவி தருவதாக வைரலாகும் தகவல்
Screengrab from Facebook/B.Benitkaran
மாஃபா பாண்டியராஜன் பெயரில் இயங்கும் அறக்கட்டளையில் கல்விக்கு நிதி உதவி தருவதாக வைரலாகும் தகவல்
Screengrab from Facebook/kvdevan

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று கேள்வி எழுப்பினாரா பாஜக ஹெச்.ராஜா?

Factcheck / Verification

முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெயரில் இயங்கும் அறக்கட்டளையில் கல்விக்கு நிதி உதவி தருவதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக  மாஃபா பாண்டியராஜன் அறக்கட்டளையை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அதற்கு, இத்தகவல் முற்றிலும் பொய்யானது. கல்விக்கு அறக்கட்டளை  சார்பில் எந்த உதவியும் செய்வதில்லை. வேலை வாய்ப்புக்கும், வேலைவாய்ப்பு தொடர்பான படிப்புக்குமே உதவி தரப்பட்டு வருகின்றது. வைரலாகும் இத்தகவல் கடந்த ஐந்து வருடங்களாகவே சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இதற்கு பலமுறை நாங்கள் மறுப்பு தெரிவித்துவிட்டோம் என்று அறக்கட்டளை தரப்பிலிருந்து நமக்கு விளக்கம் தரப்பட்டது.

தொடர்ந்து தேடியதில் மாஃபா பாண்டியராஜனின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் இத்தகவல் பொய்யானது என்று 2021, 2022 ஆண்டுகளில் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிநதது.

இதேபோல் மாஃபா அறக்கட்டளை சார்பிலும் வைரலாகும் இத்தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருநதது.

Also Read: Fact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?

Conclusion

முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பெயரில் இயங்கும் அறக்கட்டளையில் கல்விக்கு நிதி உதவி தருவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Facebook Post from Ma Foi K Pandiarajan, dated May 01, 2022
Facebook Post from Ma Foi K Pandiarajan, dated June 15, 2021
Facebook Post from Ma Foi K Pandiarajan, dated June 16, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular