75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நடிகை ரேகா…ஜெமினி கணேசனின் மகள்…வயது 75…இந்த வயதிலும் எவ்வளவு நளினம் …அப்பப்பா சூப்பர்…வயது என்பது Number மட்டுமே” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்றாரா செம்மலை?
Fact Check/Verification
75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Apurba Priti Dance Academy என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 20, 2025 அன்று இடம்பெற்றிருந்தது.

Priti Gayen Mistri என்கிற நடனக்கலைஞர் இந்த நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். அவரே சிவ தாண்டவ நடனத்தை இந்த வீடியோவில் ஆடியுள்ளார். அவருடைய அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது.
மேலும், இதே போன்று பல்வேறு நடன வீடியோக்களும் இவரது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. அவருடைய நடன வீடியோவே தற்போது நடிகை ரேகாவின் நடனம் என்று பரவி வருகிறது.
Also Read: அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்றாரா அன்வர் ராஜா?
Conclusion
75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ தகவல் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post From, Apurba Priti Dance Academy, Dated February 20, 2025
YouTube Video From, Apurba Priti, Dated March 21, 2025