“அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம்”, எனவே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இல்லையேல் அதிமுகவை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்றாரா அன்வர் ராஜா?
Fact Check/Verification
அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. முன்னாள் அமைச்சர் செம்மலை இவ்வாறு தெரிவிக்கவே இல்லை” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது. இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: குப்பைத் தொட்டியில் மு.க.ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டதாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK
Phone conversation with Vinothkumar, Digital Head, Thanthi TV