Claim
குப்பைத் தொட்டியில் மு.க.ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டது.

வைரலாகும் இப்படத்தை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: நாடார் சமுதாயத்தினர் தமிழர்கள் அல்ல என்று எச்.ராஜா கூறினாரா?
Fact
குப்பைத் தொட்டியில் மு.க.ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பதை அறிய முடிந்தது. திருவான்மியூரை சேர்ந்த திமுக ஆதரவாளர் விஎம்டி ராஜாராமன் என்பவர் பாஜக தலைவர் அண்ணாமலையின் படத்தை குப்பைத்தொட்டி, கழிவறை ஆகிய இடங்களில் ஒட்டி, அதுக்குறித்த படங்களை அவரது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

இப்படங்களில் ஒன்றை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட கீழே ஒப்பிட்டு காட்டியுள்ளோம்.


Also Read: சொந்த மகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய இஸ்லாமியர் என்று பரவும் வீடியோ உண்மையா?
Sources
Thread post by VMT Rajaraman, dated March 22, 2025