சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம். பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி மக்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற்றிருந்த பொருட்களின் தரம் தொடர்பான சர்ச்சைகளும் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. எதிர்க்கட்சிகள் மற்றொரு பக்கம் பொங்கல் பரிசுடன் மக்களுக்கு பணமும் வழங்கவில்லை என்று சர்ச்சையை உண்டாக்கின.
இந்நிலையில், “பொங்கல் தொகுப்பு – அமைச்சர் விளக்கம். பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம். பணமும் கேட்டால் நாங்கள் என்ன செய்ய? சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 தருவோம் என்று சொன்னோம்” என்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இன்றைக்கு தேர்தல் வைத்தால் கூட பாஜக ஆட்சிக்கு திரும்ப முடியாது என்றாரா பாஜகவின் ஹெச்.ராஜா?
Fact check/Verification
சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம்; பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, குறிப்பிட்ட நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் வைரலாவதால் தந்தி டிவியின் இணை ஆசிரியர் அசோக வர்ஷினியைத் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நியூஸ் கார்டின் உண்மைத்தன்மை குறித்து கேட்டபோது, வைரலாகும் நியூஸ் கார்டு “போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று நமக்கு விளக்கமளித்தார்.
மேலும், “திமுக ஆட்சியில் வழங்கிவந்த பொங்கல் பரிசு தொகுப்பை அதிமுக அரசு நிறுத்தியது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி கொரோனா நிவாரண நிதி ரூ.4,000 வழங்கியது திமுக அரசு – அமைச்சர் சக்கரபாணி” என்கிற செய்தியுடன் வெளியாகியிருந்த தந்தி டிவியின் நியூஸ் கார்டினை எடிட் செய்தே குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் நமக்கு உறுதியானது.

ORIGINAL

FAKE
Conclusion
சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே 5000 ரூபாய் தருவோம் என்று சொன்னோம்; பொங்கல் பரிசு தொகுப்பு கொடுப்பதே அதிகம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)