Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாஜகவுடன் கூட்டணியால் அதிமுக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாக செங்கோட்டையன் கூறினார்.
வைரலாகும் தகவல் தவறானதாகும். செங்கோட்டையன் தரப்பும் அஇஅதிமுக தரப்பும் இதை உறுதி செய்துள்ளனர்.
“பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவில் நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளது உண்மை தான்” என்று அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



Also Read: திமுக ஆட்சியில் போடப்பட்ட தரமற்ற சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
பாஜகவுடன் கூட்டணியால் அதிமுக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து அஇஅதிமுகவின் தேசிய செய்தித்தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக்கொண்டு இதுக்குறித்து விசாரித்தோம்.
அவர் “இத்தகவல் தவறானது” என்று மறுப்பு தெரிவித்தார்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் 18 தமிழ்நாட்டின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் நியூஸ் 18 தமிழ்நாடு இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக இந்த நியூஸ்கார்டு போலியானது என்று மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் அவரது எக்ஸ் பக்கத்தில் இச்செய்தி தவறானது என்று மறுப்பு தெரிவித்திருப்பதை காண முடிந்தது.

Also Read: காமராஜர் இறந்தபோது அழுத அறிஞர் அண்ணா என்று உளறிய சீமான்…வெளியிட்டு திருத்திய ஊடகங்கள்!
பாஜகவுடன் கூட்டணியால் அதிமுக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation With Kovai Sathyan, National Spokesperson, AIADMK
X post by Sengottaiyan, Former Minister, AIADMK, dated July 22, 2025
X post by News 18 Tamilnadu, dated July 22, 2025
Ramkumar Kaliamurthy
October 14, 2025
Ramkumar Kaliamurthy
September 27, 2025
Ramkumar Kaliamurthy
September 9, 2025