Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
ஸ்டாலின் வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று ஆ.ராசா கூறினார்.

சமூக ஊடகங்களில் வந்த பதிவை இங்கே காணலாம்.
Also Read: தலைவன் என்று சொல்லிக்கொள்ள விஜய்க்கு தகுதியில்லை என்று விமர்சித்தாரா இயக்குநர் சேரன்?
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசியதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் வீடியோவில் ரெட் பிக்ஸ் வலையொளி ஊடகத்தின் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதால் அந்த ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில் இவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் “A raja speech about edappadi palanisamy and modi” என்று தலைப்பிட்டு பிப்ரவரி 15, 2021 அன்று வைரலாகும் இவ்வீடியோவின் முழுப்பகுதி பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அதில் வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதி இல்லாதவர் என்று அச்சமயத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை ராசா விமர்சித்திருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் அதிமுக பதவியிலிருந்து விலகி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஆ.ராசா பேசிய இவ்வீடியோவை எடப்பாடி பழனிசாமி பத்திரிக்கையாளர்களிடம் காண்பித்து திமுகவை விமர்சித்திருப்பதையும் காண முடிந்தது.
இதுக்குறித்த வீடியோவானது ஏபிபி நாடு யூடியூப் பக்கத்தில் செப்டம்பர் 13, 2021 அன்று பதிவிடப்பட்டுள்ளது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் தெளிவாகுவது யாதெனில் ஆ.ராசா எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய வீடியோவை எடிட் செய்து ஸ்டாலின் குறித்து பேசியதாக திரித்து பரப்பப்படுகின்றது.
Sources
YouTube video by Red Pix, dated February 15, 2021
YouTube video by ABP Nadu, dated September 13, 2021
Ramkumar Kaliamurthy
November 28, 2025
Ramkumar Kaliamurthy
November 27, 2025
Ramkumar Kaliamurthy
October 25, 2025