Fact Check
டீ, சமோசா தரவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா; வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?
Claim: டீ, சமோசா தரவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா
Fact: சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்தனர். வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டு மாற்றபட்டதாகும்.
“திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கிற்கு வரும் தங்களுக்கு டீ, சமோசா வழங்கப்படுவதில்லை என கூறி அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா. திமுக கவுன்சிலர்களுக்கு சரியாக தரப்படுவதாகவும் தங்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அதிமுக கவுன்சிலர்கள் வேதனை! “ என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சென்னையில் மழை நேர நெரிசலால் தேங்கி நிற்கும் வாகனங்கள் என்று பரவும் AI புகைப்படம்!
Fact Check/Verification
டீ, சமோசா தரவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்ததாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாமன்ற கூட்ட அரங்கில் அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்ததாகநியூஸ்கார்டு ஒன்றை புதிய தலைமுறை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
மேற்கண்ட நியூஸ்கார்டை வைரலாகும் நியூஸ்கார்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு மேற்கண்ட நியூஸ்கார்டை எடிட் செய்து உருவாக்கியுள்ளனர் என அறிய முடிந்தது.


இதனைத் தொடர்ந்து புதிய தலைமுறையின் டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.
Also Read: ஓடும் நர்மதை நதியில் பிடிமானமின்றி இயற்கையாக அமைந்திருக்கும் கற்களா இவை?
Conclusion
டீ, சமோசா தரவில்லை என்று அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்ததாக சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்ததாக வெளிவந்த நியூஸ்கார்டை எடிட் செய்து இந்த நியூஸ்கார்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
X post from Puthiya Thalaimurai, Dated November 28, 2024
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்