Claim: மேலவளவு கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் சிறை சென்ற குற்றவாளிகள் 13 பேரை விடுதலை செய்த திமுக அரசு
Fact: பஞ்சாயத்து தலைவர் முருகேசன் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆகும்.
மேலவளவு கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் சிறை சென்ற குற்றவாளிகள் 13 பேரை விடுதலை செய்த திமுக அரசு என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“பட்டியல் பிரிவில் இருக்கும் மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாதுகாக்காது என்பதற்கு இதுவே எடுத்துகாட்டு.
இதுதான் திமுகவின் சமூகநீதி திராவிட மாடல் ஆட்சி. திமுகவிற்கும் திருமாவளவனுக்கும் வாக்கு அளிக்கும் சமூகம் உணரவேண்டும்” என்று இந்த செய்தி பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மசாஜ் செய்யும்போது தலையை திருப்பியதால் இளைஞர் மரணம்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Fact Check/Verification
மேலவளவு கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு குற்றவாளிகள் 13 பேரை விடுதலை செய்த திமுக அரசு என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
முருகேசன் என்பவர் மேலவளவு தனித்தொகுதியில் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், அவரை மற்றொரு பிரிவினர் 1997, ஜூன் 30 அன்று கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 10 ஆம் தேதி, 2019ஆம் ஆண்டு தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், முருகேசன் கொலை வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது எனவும், அதில் மூவர் ஏற்கனவே நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் எம்ஜிஆர் பிறந்த தினத்தை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறையில் கழித்த சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு என்கிற அடிப்படையில் இவ்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஏனைய 13 கைதிகளும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, BBC, IE தமிழ் உள்ளிட்டவற்றிலும் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வழக்கில் கைதிகள் விடுவிக்கப்பட்டபோது ஆட்சியில் இருந்தது அதிமுக என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
Also Read: இந்து பெண்ணுக்கு புர்கா தந்து மானத்தை காப்பாற்றிய இஸ்லாமியப் பெண்; வைரலாகும் வீடியோ உண்மையானதா?
Conclusion
மேலவளவு கிராம பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு குற்றவாளிகள் 13 பேரை விடுதலை செய்த திமுக அரசு என்று பரவும் செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report By Dinakaran, Dated November 10, 2019
YouTube Video By NewsJ, Dated November 10, 2019
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)