Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: இந்தியாவை மீட்க காங்கிரஸ்க்கு ஆதரவாக களமிறங்கிய புஷ்பா
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற India Day Parade-ல் எடுக்கப்பட்டதாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜூன் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இந்தியாவை மீட்க காங்கிரஸ்க்கு ஆதரவாக களமிறங்கிய புஷ்பா” என்று இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?
Fact Check/Verification
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜூன் என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஆகஸ்ட் 21, 2022 அன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் The Federation of Indian Association ஒருங்கிணைத்திருந்த India day Parade நிகழ்வில் Grand Marshal-ஆக கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.
மேடிசன் அவென்யூவில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தேசியக்கொடியை ஏந்தி கலந்துகொண்டிருந்தார் நடிகர் அல்லு அர்ஜூன். மேலும், இந்நிகழ்வில் அவருடன் அவரது மனைவி சினேகா அல்லு அர்ஜூனும் கலந்து கொண்டிருந்தார். இதுகுறித்த செய்திகளை இங்கே, இங்கே, இங்கே, இங்கே மற்றும் இங்கே படியுங்கள்.
இதுகுறித்து, அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சான்றிதழையும் தனது X பக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு பகிர்ந்துள்ளார் அல்லு அர்ஜூன். குறிப்பிட்ட நிகழ்வின் வீடியோவே அவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக பரவி வருகிறது.
Conclusion
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் அல்லு அர்ஜூன் என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
X Post From, Allu Arjun, Dated August 22, 2022
X Post From, Sarath Chandra Naidu, Dated August 22, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.