செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 30, 2024

HomeFact Checkஇந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டது.

Fact: வைரலாகும் கருத்துக்கணிப்பு போலியானது என்று டைனிக் பாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 326 இடங்களில் வென்று இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல்

X Link | Archive Link

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல்

Archive Link

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் தவறான வீடியோத்தகவல்!

Fact Check/Verification

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரப்பப்படும் தகவலுடன் செய்தித்தாள் பக்கம் ஒன்றின் படமும் பகிரப்படுவதை காண முடிந்தது. அச்செய்தித்தாளை உற்று நோக்குகையில், அது போபாலிலிருந்து 13/04/2024 அன்று வெளிவந்த செய்தித்தாளின் பக்கம் என அறிய முடிந்தது.

எனவே டைனிக் பாஸ்கரின் ஈ-பேப்பர் இணையத்தளத்தில் 13/04/2024 அன்று போபாலிலிருந்து வெளிவந்திருந்த செய்தித்தாளில் இச்செய்தி இடம்பெற்றுள்ளதா என தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல்

இதன்படி பார்க்கையில் வைரலாகும் கருத்துக்கணிப்பு போலியானது என உணர முடிந்தது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான செய்தித்தாளின் பக்கத்தையும், வைரலாகும் செய்தித்தாளின் பக்கத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தேடியதில் டைனிக் பாஸ்காரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இந்த கருத்துக்கணிப்பு போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளதை காண முடிந்தது.

 Also Read: அம்பத்தூர் தொழிற்பேட்டையை விட அயோத்தி ராமர் கோவிலில் அதிக வருமானம் வருகின்றது என்றாரா நிர்மலா சீதாராமன்?

Conclusion

இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று டைனிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from Dainik Baskar, Dated April 13, 2024
Dainik Baskar E-Paper

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular