Fact Check
அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக பரவும் எடிட் படம்!
Claim: அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக பரவும் படம்!
Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும். அமர் பிரசாத் ரெட்டி ‘A primer of Hinduism’ எனும் புத்தகத்தையே படித்தார்.
தமிழக பாஜகவை சார்ந்த அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!
Fact Check/Verification
அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் தகவல் குறித்து ஆராய்ந்தோம்.
அதில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என அறிய முடிந்தது. அமர் பிரசாத் ரெட்டி டிசம்பர் 13, 2023 அன்று அவரது எக்ஸ் பக்கத்தில் ‘Proud Hindu from Tamil Nadu’ என்று தலைப்பிட்டு ‘A primer of Hinduism’ என்ற தலைப்புள்ள புத்தகத்தை படிப்பதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அப்படத்தை எடிட் செய்தே வைரலாகும் அப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டியிடம் தொடர்புக் கொண்டு பேசுகையில் அவரும் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உறுதி செய்தார். அவர் ‘A primer of Hinduism’ புத்தகத்தையே படித்ததாகவும் தெளிவு செய்தார்.
தொடர்ந்து ‘A primer of Hinduism’ புத்தகம் குறித்து தேடினோம். அதில் இப்புத்தகமானது D.S.சர்மா என்பவரால் எழுதப்பட்ட ஆன்மீக புத்தகம் என அறிய முடிந்தது.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
அமர் பிரசாத் ரெட்டி காமசூத்ரா புத்தகத்தை படிப்பதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
X post from Amar Prasad Reddy, BJP, Dated December 13, 2023
Phone Conversation with Amar Prasad Reddy, BJP
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)