திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும் அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் வீடியோ!

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் வீடியோவில் இருப்பது சுவாமி நாராயண் அக்ஷர்தம்மாகும். இது டெல்லியில் உள்ளது.

“500 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு பலர் உயிர் தியாகம் செய்து திறப்பு விழாவிற்கு தயாரானது அயோத்தி ஸ்ரீராம ஜென்ம பூமி” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அயோத்தி ராமர் கோவில் என்று வைரலாகும் வீடியோ

Twitter Link | Archived Link

அயோத்தி ராமர் கோவில் என்று வைரலாகும் வீடியோ

Archived Link

அயோத்தி ராமர் கோவில் என்று வைரலாகும் வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக அரசின் வெள்ள நிவாரண தொகையை நாம் தமிழர் கட்சிக்கு நிதியாக அனுப்பக் கேட்டாரா சீமான்?

Fact Check/Verification

திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும் அயோத்தி ராமர் கோவில் என்று வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

இத்தேடலில் பாலோவஷி (Bhalovashi) எனும் புகைப்படக் கலைஞர் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டெல்லி அக்ஷர்தம்மில் எடுக்கப்பட்டதாக கூறி இதே வீடியோவை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

அயோத்தி ராமர் கோவில் என்று வைரலாகும் வீடியோ
Screengrab from Instagram

தொடர்ந்து டெல்லி சுவாமி நாராயண் அக்ஷர்தம்மின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆய்வு செய்ததில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் கட்டடம் அக்ஷர்தம்மின் கட்டடம்தான் என்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து ராமர் கோவில் குறித்து தேடுகையில், ராமர் கோவில் கட்டுமானத்தை கவனித்து வரும் ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் கடந்த வெள்ளியன்று (15/12/2023) ராமர் கோவிலின் படங்கள் சில பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்படங்களை காண்கையில் ராமர் கோவிலானது இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை என அறிய முடிந்தது.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

திறப்பு விழாவிற்கு தயாராக இருக்கும் அயோத்தி ராமர் கோவில் என்று வைரலாகும் வீடியோவில் காணப்படும் கட்டடம் அயோத்தி ராமர் கோவில் அல்ல; அது டெல்லியில் இருக்கும் சுவாமி நாராயண் அக்ஷர்தம்மாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram post from Bhalovashi, Dated June 14, 2023

X post from Shri Ram Janmbhoomi Teerth Kshetra, Dated December 15, 2023
Akshardham Website

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular