வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

HomeFact Checkஇந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்றாரா அமித் ஷா?

இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்றாரா அமித் ஷா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்தியாவை  இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியாவை  இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட்

“சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். அதுதான் மத சார்பற்ற நாடு. இந்துக்களை மட்டும் சீண்டி கொண்டிருந்தால் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்கவும் தயங்க மாட்டோம்” என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவை  இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் -1

Facebook Link

இந்தியாவை  இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் -2

Facebook Link

இந்தியாவை  இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: நீட் தேர்வை ரத்து செய்யாவிடில் தீக்குளிப்பேன் என்றாரா வன்னி அரசு?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

இந்தியாவை  இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டனது கடந்த சில ஆண்டுகளாகவே சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்த நியூஸ்கார்டில் தேதி, நேரம் குறிப்பிடவில்லை. மேலும் நியூஸ் 7  தமிழின் லோகோ வாட்டர் மார்க்கும் இதில் இடம்பெறவில்லை. அதேபோல் இதில் சில எழுத்துப் பிழைகள் இருப்பதையும் நம்மால் காண முடிந்தது.  

எனவே இது போலியான நியூஸ்கார்டாகத்தான் இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிந்தது. இருப்பினும் பலர் இந்த நியூஸ்கார்டை உண்மையானது என்று நம்பி பகிர்ந்து வருவதால், இதை முழுமையாக ஆராய்ந்து இதுக்குறித்து விளக்க முடிவு செய்தோம்.

முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ்வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் பிரசுரித்ததற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜ் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.

இதற்கு அவர்,

“இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் பிரசுரிக்கவில்லை.”

என்று விளக்கமளித்தார்.

Also Read: கையில் கட்டுடன் வைரலான பாஜக நிர்வாகி சுமதி இஸ்லாமியப் பெண் வேடமிட்டாரா? உண்மை என்ன?

Conclusion

இந்தியாவை  இந்து நாடாக அறிவிக்க தயங்க மாட்டோம் என்று அமித் ஷா கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular