கையில் கட்டுடன் வைரலான பாஜக பெண் நிர்வாகி ஒருவர், தற்போது இஸ்லாமியப் பெண் வேடத்தில் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைவதாக நாடகமாடியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு, சென்னை நங்கநல்லூரில் திமுகவினர் எழுதிய சுவர் விளம்பரங்களை பாஜக மகளிர் அணியினர் சுண்ணாம்பு பூசி அழித்தனர். இதனால் திமுக மற்றும் பாஜகவினரிடையே மொதால் ஏற்பட்டது.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில் பாஜக மகளிரணி நிர்வாகியான சுமதி வெங்கடேஷ் கையில் மற்றும் தலையில் கட்டுடன் கலந்து கொண்டார். திமுகவினரின் அராஜகம் என்று ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார். ஆனால், மறுநாளே அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் எவ்வித கட்டுகளும், உடலில் காயங்களோ இன்றி கலந்து கொண்டார். இந்நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை தலைமையில் இஸ்லாமியப் பெண் ஒருவர் பாஜகவில் இணையும் புகைப்படம் ஒன்றினைப் பதிவிட்டு “அதே அம்மணி…இம்முறை இஸ்லாமியர் வேஷம்” என்பதாக சுமதி வெங்கடேஷ் இஸ்லாமிய வேடம் தரித்துள்ளதாகப் புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆற்றில் அடித்துச் செல்லும் மாடுகள்; வைரலாகும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
Fact check/ Verification
கையில் கட்டுடன் கடந்த ஆண்டு வைரலான பாஜக நிர்வாகி சுமதி வெங்கடேஷ், தற்போது இஸ்லாமியப் பெண் வேடத்தில் பாஜகவில் இணைந்துள்ளதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலாவதாக, வைரலாகும் புகைப்படத்தில் பாஜக தமிழகத்தலைவர் அண்ணாமலையிடம் குறிப்பிட்ட இஸ்லாமியப் பெண் தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளார்; அது பாஜகவில் இணைவதற்கான படிவம் அல்ல என்பதை பாஜக தரப்பில் உறுதி செய்து கொண்டோம்.
மேலும், குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் அண்ணமலை மற்றும் இஸ்லாமியப் பெண்ணிற்கு பின்புறம் நிற்பவரே சுமதி வெங்கடேஷ் என்பதையும் நம்மால் அறிய முடிந்தது. இதனை, பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் இணை செயலாளர் பிரபாகரன் மூலமாக நாம் உறுதிப்படுத்திக் கொண்டோம்.
எனவே, பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் மனு அளிக்கின்ற இஸ்லாமியப் பெண்ணுக்கு பின்புறம் நிற்பவரே சுமதி வெங்கடேஷ் என்பது நமக்கு உறுதியானது.
Conclusion:
கையில் கட்டுடன் கடந்த ஆண்டு வைரலான பாஜக நிர்வாகி சுமதி வெங்கடேஷ், தற்போது இஸ்லாமியப் பெண் வேடத்தில் பாஜகவில் இணைந்துள்ளதாகப் பரவுகின்ற புகைப்படத்தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)