சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  Wig Boss என்று விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  Wig Boss என்று விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்டதா ஆனந்த விகடன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: முதல்வர் ஸ்டாலின் தலைமுடியை விமர்சித்து கார்ட்டூன் வெளியிட்ட விகடன்

Fact: வைரலாகும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை Wig Boss என்று விமர்சித்த ஆனந்த விகடனின் கார்ட்டூன் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“விகடன் மாமா வன்மத்த கக்கிட்டான்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

முதலமைச்சர்
Screenshot from x @slmsangikannan

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை Wig Boss என்று விமர்சித்த ஆனந்த விகடனின் கார்ட்டூன் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் கார்ட்டூனை ஆனந்த விகடன் உண்மையில் வெளியிட்டுள்ளதா என்று ஆராய்ந்தபோது அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “சட்டம் ஒழுங்கு” என்கிற வாசகங்களுடன் குறிப்பிட்ட கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது. ஆனால், வைரல் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள Wig Boss உள்ளிட்ட வார்த்தைகள் அதில் இல்லை.

எனவே, இதுகுறித்து விகடன் ஆசிரியர் குழுவில் ஒருவரான பிரிட்டோ வைத் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர் ”வைரலாகும் புகைப்படத்தில் குறிப்பிட்ட வாசகம் போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது; சட்டம் ஒழுங்கு என்கிற கார்ட்டூன் மட்டுமே விகடன் தரப்பில் வெளியிடப்பட்டது” என்று விளக்கமளித்தார்.

Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

Conclusion

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை Wig Boss என்று விமர்சித்த ஆனந்த விகடனின் கார்ட்டூன் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
X Post From, Ananda Vikatan, Dated July 11, 2024
Phone Conversation with, I.Britto, Vikatan, Dated July 12, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular