ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஅன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் புகைப்படம் இருந்ததா?

அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் புகைப்படம் இருந்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்தது.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை மாற்றி மோகன் பகவத் படம் வைக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் தனியார் அறக்கட்டளையை சார்ந்த ஆன்மீக பேச்சாளர் மஹாவிஷ்ணு என்பவர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அப்பேச்சாளருடன் பள்ளிக்கல்வித்திறை அமைச்சர் அன்பில் மகேஷ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அப்படத்தில் அன்பில் மகேஷிடம் மஹா விஷ்ணு மனு ஒன்று கொடுப்பதாய் இருந்தது. அவர்கள் இருந்த அலுவகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்தது.

X Link | Archive Link

அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்தது.

Archive Link

அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்தது.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்ததாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படதை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.

இத்தேடலில் தமிழக அரசு பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய திருவருட்பாவை சேர்க்க வேண்டும் என்று மஹாவிஷ்ணு மனு கொடுத்ததாக மின்னம்பலம் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் வைரலாகும் படம் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது.

அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்தது.

ஆனால் அப்படத்தில் மோகன் பகவத் படம் இடம்பெற்றிருக்கவில்லை; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படமே இடம்பெற்றிருந்தது. 

தொடர்ந்து தேடுகையில் இச்சந்திப்பு குறித்து மஹாவிஷ்ணு அவரின் பரம்பொருள் ஃபவுண்டேஷனின் யூடியூப் பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் அன்பில் மகேஷுடன் மஹாவிஷ்ணு இருக்கும் படமும் இடம்பெற்றிருந்தது. அப்படத்திலும் மு.கஸ்டாலினின் படமே இருந்தது; மோகன் பகவத்தின் இடம்பெற்றிருக்கவில்லை.

அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் படம் இருந்ததாக பரப்பப்படும் படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பது உறுதியாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

 Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?

Conclusion

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அலுவலகத்தில் RSS தலைவர் மோகன் பகவத் புகைப்படம் இருந்ததாக பரவும் புகைப்படம் எடிட் செய்து மாற்றப்பட்டதாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படத்தை மாற்றி மோகன் பகவத் படம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from Minnambalam, Dated May 13, 2023
YouTube Video from Paramporul Foundation, Dated October 21, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular