Claim: சாராய சாவுகளுக்கு காரணமான குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியதாக பரவும் நியூஸ்கார்டு.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று பாலிமர் நியூஸ் தெளிவு செய்துள்ளது.
“தமிழர்களைச் சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள் தான்;சாராயச் சாவுகளுக்கு அடிப்படைக் காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ, கிராமக் கோவில் திருவிழாக்களைத் தடை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருப்பதி தரிசனக் கட்டணம் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதா?
Fact Check/Verification
சாராய சாவுகளுக்கு காரணமான குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர். என். ரவி கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஆளுநர் தரப்பிலிருந்து ராஜ்பவனின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
"கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பல உயிர்கள் பலியானதாக கூறப்படுவதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலையும், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன். நமது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது, கள்ளச்சாராயம் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக செய்திகள் வெளிவருகின்றன. அவை சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடுப்பதில் தொடரும் குறைபாடுகளை பிரதிபலிக்கின்றன. இது தீவிர கவலைக்குரிய விஷயமாகும்."
இப்பதிவில் குலதெய்வ வழிபாடு குறித்தோ, அதை தடை செய்ய வேண்டும் என்றோ எந்த ஒரு இடத்திலும் பேசப்பட்டிருக்கவில்லை.
மேற்கொண்டு தேடியதில் மேற்குறிய எக்ஸ் பதிவை தவிர்த்து வேறு எந்த ஒரு இடத்திலும் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கவர்னர் பேசி இருக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது பாலிமர் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டில் உள்ளதால் அந்த ஊடகம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டுள்ளதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை. மாறாக வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று பாலிமர் நியூஸ் மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து பாலிமர் நியூஸின் ஆசிரியர் சுரேந்தரை தொடர்புக் கொண்டு பேசுகையில் “வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது, அந்த நியூஸ்கார்டை நாங்கள் பதிவிடவில்லை, வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
Update:
வைரலாகும் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை பரப்புவோர் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: உத்திரப்பிரதேசத்தில் வயதான முதியவரை கடுமையாக தாக்கும் யோகியின் போலீஸ் என்று பரவும் தவறான வீடியோ!
Conclusion
சாராய சாவுகளுக்கு காரணமான குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று ஆளுநர் ரவி கூறியதாக பரவும் நியூஸ்கார்டு போலியானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
X post from Polimer News, Dated June 24, 2024
X post from Raj Bhavan, Tamilnadu, Dated June 19, 2024
Phone conversation with Surender, Editor, Polimer News
X post from Raj Bhavan, Tamilnadu, Dated June 24, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)