வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024
வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024

HomeFact Checkஆந்திர வெள்ளத்தில் மாட்டியவர்களை JCB மூலம் காப்பாற்றும் காட்சி என்று பரவும் சவுதி அரேபியா வீடியோ!

ஆந்திர வெள்ளத்தில் மாட்டியவர்களை JCB மூலம் காப்பாற்றும் காட்சி என்று பரவும் சவுதி அரேபியா வீடியோ!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ஆந்திர வெள்ளத்தில் மாட்டியவர்களை JCB மூலம் காப்பாற்றும் காட்சி

Fact: வைரலாகும் செய்தி கடந்த ஏப்ரலில் சவுதியில் எடுக்கப்பட்டதாகும்.

ஆந்திர வெள்ளத்தில் மாட்டியவர்களை JCB மூலமாக காப்பாற்றும் காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ஆந்திராவில் வெள்ளத்தில் காருடன் மாட்டிக்கொண்டு தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை தனது JCB வாகனத்தால் தைரியமாக மீட்டு வந்தார் முஹம்மது சுபஹான் பாய்” என்பதாக இந்த வீடியோ பரவி வருகிறது.

Screenshot from X @hyderali857685

X Link/Archived Link

Screenshot from X @Sukumaran170859

X Link/Archived Link

Screenshot from X @senthamizh_1234

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.  

Also Read: விஜய் நடித்த GOAT திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனம் செய்த ரசிகர் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

ஆந்திர வெள்ளத்தில் மாட்டியவர்களை JCB மூலம் காப்பாற்றும் காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஏப்ரல் 27, 2024 அன்று MSDAR_NEWS என்கிற செய்தி ஊடகத்தின் சமூக வலைத்தளப்பக்கத்தில் “Widespread praise for the heroic stance of a Saudi man and members of the Civil Defense who risked their lives to rescue four people trapped in floods in Bisha Governorate” என்று இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது.

சவுதி அரேபியாவின் பிஷா நகரில் வெள்ளத்தில் மாட்டியவர்களை காப்பாற்றிய நபர் மற்றும் வீரர்கள் என்று இந்த வீடியோ குறித்த செய்தி வைரல் வீடியோ காட்சியுடன் BBC Arabic சேனலில் கடந்த ஏப்ரல் 30, 2024 அன்று இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோவே தற்போது ஆந்திரா என்பதாகப் பரவி வருகிறது.

 Also Read: சென்னையில் நடைபெற்ற F4 கார் ரேஸில் கலந்து கொண்டாரா நடிகை நிவேதா பெத்துராஜ்?

Conclusion

ஆந்திர வெள்ளத்தில் மாட்டியவர்களை JCB மூலம் காப்பாற்றும் காட்சி என்று பரவும் வீடியோ சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
YouTube Video From, bbcnewsarabic, Dated April 30, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular