Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சவுதி அரேபியா பேருந்து விபத்து காட்சி
வைரலாகும் வீடியோ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றின் காட்சியாகும்.
சவுதி அரேபியா பேருந்து விபத்து காட்சி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“சவுதி அரேபியாவில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, டீசல் டேங்கர் லாரி மீது மோதியது. இதனால் மளமளவென தீ பற்றி 42 யாத்ரீகர்கள் உயிருடன் எரிந்து இறந்துள்ளனர். “ என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ராஜ்நாத் சிங் காலில் விழுந்ததாக பரவும் வீடியோ உண்மையா?
சவுதி அரேபியா பேருந்து விபத்து காட்சி என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
மெக்காவில் இருந்து மதீனா நோக்கி பேருந்தில் பயணம் செய்த 45 இந்தியர்கள் டேங்கர் லாரி மோதி உயிரிழந்தனர். அந்த கோர நிகழ்வின் காட்சி என்பதாக வைரல் வீடியோ பரவும் நிலையில் அந்த வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அப்போது, கடந்த ஜூன் 24, 2017ஆம் ஆண்டு பஹத் அல்சாமி என்கிற யூடியூப் பக்கம் ஒன்றில் இந்த வீடியோ பதிவாகியிருந்தது. “அகபா ஷாரில் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநர் தீயில் கருகி உயிரிழந்தார்” என்று அந்த வீடியோ தகவல் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, இந்த விபத்து குறித்த செய்திகளைத் தேடியபோது Okaz.com என்கிற இணைய ஊடகப்பக்கத்தில் கடந்த ஜூன் 24, 2017 அன்று 32 டன் டீசல் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி ஒன்று ஷார் மலைப்பாதையில் பாலம் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அந்த டேங்கர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே செய்தி அல் அரேபியா ஊடக பக்கத்திலும் வெளியாகியிருந்தது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த விபத்து வீடியோவே தற்போதைய சவுதி அரேபிய விபத்துடன் தொடர்பு படுத்தி பரப்பப்படுகிறது.
Also Read: பீகாரில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புரட்சி நடந்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
சவுதி அரேபியா பேருந்து விபத்து காட்சி என்று பரவும் வீடியோ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து ஒன்றின் காட்சி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by, Fahad Alhazmi, Dated June 24, 2017
News Report by, Alarabiya, Dated June 24, 2017
News Report by, Okaz.com, Dated June 24, 2017
Vijayalakshmi Balasubramaniyan
November 4, 2024
Vijayalakshmi Balasubramaniyan
September 12, 2024
Vijayalakshmi Balasubramaniyan
November 23, 2021