சீமான் குறித்து எச்.ராஜா பேசியது தவறில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாய் ஒரு மலையாளி, சீமான் தமிழரே இல்லை என்ற கோணத்தில் பேசி இருந்தார்.
இதற்கு சீமான் “நான் எப்போதுமே பைத்தியக்காரர்களை கண்டு பரிதாபப்படுவேனே ஒழிய, அவர்களுக்கு பதில் சொல்லுவதில்லை”என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஹெச்.ராஜாவுக்கு ஆதரவாக பேசியதாக கூறி சன் நியூஸ் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வைரலாகும் நியூஸ்கார்டில், “ஹெச்.ராஜா அவர்கள் கேட்டதில் தவறில்லை. ஆனால் அவர் இன்னும் சரியாக சீமானின் தகப்பனார் தமிழரா என்று கேட்டிருக்க வேண்டும்; அவரது தாத்தா பெயர் யாக்கோபு தானே? மறுக்க முடியுமா?” என்று அண்ணாமலை பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Also Read: பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
சீமான் குறித்து எச்.ராஜா பேசியது தவறில்லை என்று அண்ணாமலை கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டில் அண்ணாமலையின் புகைப்படம் சன் நியூஸ் லோகோவுக்கு மேல் இடம்பெறுள்ளது. அதேபோல் அந்த கார்டில் சன் நியூஸின் லோகோ வாட்டர்மார்க் பாதி அழிக்கப்பட்டுள்ளது.

இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக நமக்கு தோன்றியது. இருப்பினும் இதை உண்மை என்று நம்பி பலர் பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்து விளக்க முடிவு செய்தோம்.
முன்னதாக இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம். இந்த தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை சன் நியூஸ் வெளியிட்டதற்கான எந்த ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சன் நியூஸின் டிஜிட்டல் துறை பொறுப்பாளர் மனோஜ் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம்.
இதற்கு அவர்,
“இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் வெளியிடவில்லை, இது முற்றிலும் பொய்யான நியூஸ்கார்ட்”
என்று விளக்கமளித்தார்.
இதன்பின் அண்ணாமலைத் தரப்பை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து கேட்டோம். இதற்கு கூடிய விரைவில் பதிலளிப்பதாகஅண்ணாமலை தரப்பிலிருந்து பதில் கிடைத்தது. அந்த பதில் நமக்கு கிடைக்கும்பட்சத்தில் அதை இக்கட்டுரையில் இணைக்கின்றோம்.
Also Read: எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!
எனினும் சீமான் குறித்து எச்.ராஜா பேசியது தவறில்லை என்று அண்ணாமலை கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் முற்றிலும் போலியானது என்பது மேற்கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெள்ளத் தெளிவாக உறுதியாகின்றது.
Conclusion
சீமான் குறித்து எச்.ராஜா பேசியது தவறில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Sun News Digital Head Manoj’s Testimonial:-
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)