ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்றாரா அண்ணாமலை?

ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்றாரா அண்ணாமலை?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கைக்கடிகார விகாரம் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக இருந்து வருகின்றது.

அண்ணாமலை அணிந்திருக்கும் ரஃபேல் கடிகாரத்திற்கான ரசீதை அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்டிருந்த நிலையில், கடந்த 20119 ஆம் ஆண்டு ரஃபேல் ஆவணங்கள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டன. என்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் அந்த ஆவணங்களுடன் சேர்ந்து திருடப்பட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 01
Screenshot from Twitter @jaya2016maha
 ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 02
Screenshot from Facebook / thaslimahamed.sdpi
 ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட்  - 03
Screenshot from Facebook / sheikdawood.sheikpeer

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக பரவும் போலி புகைப்படம்!  

Fact Check/Verification

ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று  வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம்.  இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை அறிய முடிந்தது.

ரபேல் கடிகாரம் குறித்து அனைத்து அமைச்சர்களும் பேச வேண்டும். அப்போதுதான் அவர்களின் ஊழல் குறித்து வெளியே கொண்டு வர முடியும் என்று கோவையில் அண்ணாமலை பேசியதாக  தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தது.

இந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத்தை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அவரும் அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.

தொடர்ந்து தேடியதில், ரஃபேல் வாட்சின் ரசீது தன்னிடம்தான் உள்ளது, எப்போது இந்த வாட்ச் குறித்து டீ கடையில் பேசுகின்றனரே அப்போது இதை வெளிடுவோம் என்று கோவையில் நடந்த பாஜக நிகழ்வு ஒன்றில் அண்ணாமலை பேசி இருந்ததை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணியின் மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில்,  இத்தகவல் பொய்யானது என்பதை அவரும் தெளிவு செய்தார்.

Also Read:  உலகக் கோப்பையை வென்றப்பின் மெஸ்ஸி தனது தாயை அணைத்ததாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

ரஃபேல் ஆவணங்களுடன் தன்னுடைய கடிகாரத்திற்கான ரசீதும் திருடப்பட்டுவிட்டது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Facebook post, from Thanthi TV, on December 21, 2022
Phone conversation with Vinoth, Thanthi Tv, on December 22, 2022
Youtube video, from Dinamalar, Dated December 22, 2022
Phone conversation with CTR Nirmalkumar, President, BJP IT Wing, Dated December 22, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular