Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பீகார் தேர்தல் முடிவுக்கு பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ.
வைரலாகும் வீடியோவுக்கும் பீகார் தேர்தலுக்கும் எவ்வித தொடர்புமில்லை. பிரபல பாடகர் ஜுபீன் கர்க் என்பவரின் இறுதி ஊர்வலத்துக்கு வந்த கூட்டமே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
பீகார் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) வெளியானது. அதில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 202 இடங்களை பெற்று அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தல் முடிவுக்குப்பின் பாஜகவின் வெற்றியை எதிர்த்து பொதுமக்கள் கூடி போராட்டம் நடத்தியதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராகுல் காந்தி இளம்பெண் ஒருவருடன் இன்பச்சுற்றுலா சென்றதாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?
பீகார் தேர்தல் முடிவுக்கு பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அத்தேடலில் பிரபல பாடகர் ஜுபீன் கர்க்கின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் கலந்துக்கொண்டதாக கூறி வைரலாகும் இதே வீடியோ @mahariaprahlad எனும் பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செப்டம்பர் 21, 2025 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அதாவது பீகார் தேர்தல் முடிவு வருவதற்கு ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்கு முன்பே பகிரப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் வேறு சில இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் 2025 செப்டம்பரில் ஜுபீன் கர்க்கின் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து தேடுகையில் நாகாலாந்தின் சுற்றுலா மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் தெம்ஜென் இம்னா அலாங் என்பவரின் எக்ஸ் பக்கத்தில் ஜுபீன் கர்க்கின் இறுதி ஊர்வலத்துக்கு பெருங்கூட்டம் வந்ததாக கூறி வீடியோ செப்டம்பர் 21, 2025 அன்று பதிவிடப்பட்டிருந்தை காண முடிந்தது. அவ்வீடியோவின் பகுதியாக வைரலாகும் வீடியோவும் இடம்பெற்றிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் பீகார் தேர்தலுக்கும் எவ்வித தொடர்புமில்லை என தெளிவாகின்றது.
Also Read: அமித் ஷாவின் காலணிகளை ஊடகவியலாளர் நவிகா குமார் துடைத்ததாக பரவும் வீடியோ உண்மையானதா?
பீகார் தேர்தல் முடிவுக்கு பாஜகவை எதிர்த்து மக்கள் திரண்டதாக பரவும் வீடியோ தவறானதாகும். பிரபல பாடகர் ஜுபீன் கர்க்கின் இறுதி ஊர்வலத்துக்கு பெரும் கூட்டம் வந்தது. அதுக்குறித்த வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram post by the user, @mahariaprahlad, dated September 21, 2025
X post by Temjen Imna Along, Tourism & Higher Education Minister, Nagaland, dated September 21, 2025
Ramkumar Kaliamurthy
November 19, 2025
Ramkumar Kaliamurthy
November 13, 2025
Ramkumar Kaliamurthy
November 6, 2025