பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இப்படத்தை கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த குளச்சல் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் உட்பட பலர் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. பிரதமர் மோடி கடந்த வருடம் டிசம்பரில் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இரவு நேரத்தில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் ஒரு பகுதியாக பனாரஸ் ரயில் நிலையத்தையும் ஆய்வு செய்தார்.
இச்சமயத்தில் 1:13 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் பிரதமர் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். இப்படமானது மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
அதேபோல் பிரதமரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இப்படம் பதிவிடப்பட்டுள்ளது.
பிரதமரின் இப்படத்தில் 01:13 என்பதை 04:20 என்று எடிட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்த புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு… வைரலாகும் செய்தி உண்மையானதா?
Conclusion
பிரதமர் மோடி 4:20 என்று மணி காட்டும் கடிகாரத்தின் கீழ் நிற்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Sources
Facebook Post, from Ministry of Information & Broadcasting, Government of India, Dated December 14, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)