Fact Check
சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை
Fact
வைரலாகும் புகைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“திமுக ஆட்சியை அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன் என்று சொன்னதை மறந்துட்டாரா? ஒருவேளை அம்னீசியாவா இருக்குமோ??” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2022ஆம் ஆண்டே இப்புகைப்படத்தை உடுப்பி கங்காதரன் என்கிற பாஜக ஆதரவாளர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்த நம் தேடலில் கடந்த மார்ச் 10, 2022ஆம் ஆண்டு சதீஷ்குமார் என்கிற மற்றொரு பாஜக ஆதரவாளரும், மார்ச் 09, 2022 ஆம் ஆண்டு சுதாகர் என்கிற மற்றொருவரும் இப்புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் ஷேர் செய்துள்ளனர்.
ஆனால், அண்ணாமலை கடந்த டிசம்பர், 2024ஆம் ஆண்டுதான் “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
எனவே, தற்போது பரவுகின்ற புகைப்பட இந்த சபதத்திற்கு முன்பாகவே எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.
Also Read: ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று போஸ்டர் ஒட்டினரா பாஜகவினர்?
Conclusion
சபதத்தை மறந்துவிட்டு காலில் செருப்பு அணிந்த அண்ணாமலை என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post From, M.C.Sathishkumar, Dated March 10, 2022
X Post From, Sudhakar.T, Dated March 09, 2022