சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkபெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை

Fact: வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது உண்மையில் யுவன்ஷங்கர் ராஜா ஆவார்.

பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”ஒருத்தன் ஐபிஎஸ் னு பொய் சொல்லி கட்சியை ஏமாத்துறவன்..இன்னொருத்தன் Standup காமெடியன் னு பொய் சொல்லி ஆடியன்ஸ்ஐ ஏமாத்துறவன்.. குட் காம்பினேஷன்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from x @Anti_CAA_23

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification  

பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் என்று பரவிய புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது குறிப்பிட்ட புகைப்படத்தில் பயாஸ் ஹூசைனுடன் இருப்பவர் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்பது தெரிய வந்தது.

கடந்த ஜனவரி 11 அன்று பயாஸ் ஹூசைன் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “Cover photo layum Yuvan
DP layum Yuvan”
என்று இப்புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

குறிப்பிட்ட புகைப்படத்தையே எடுத்து அதில் யுவன் ஷங்கர் ராஜாவின் முகத்தை எடிட் செய்து அண்ணாமலை முகத்தை இணைத்துள்ளனர் என்பது நமக்கு உறுதியாகியது.

Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

Conclusion

பெரியார் பற்றி பேசிய பயாஸ் ஹூசைனுடன் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post from Faiyaaz Hussain, Dated January 11, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan

Most Popular