ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட்

முன்னாள் அமைச்சரும் அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளருமான அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக கடந்த செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது.

கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டதாலும், கட்சி கட்டுப்பாடுகளை மீறி கட்சித் தலைமையின் முடிவுகளுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கியதாலும் அன்வர் ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தரப்பிலிருந்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதிமுக செய்தி அறிக்கை

இந்நிலையில் பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு அன்வர் ராஜா எதிர்ப்பு தெரிவித்ததாலேயே அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறி ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 1

Twitter Link | Archive Link

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக பரவும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: ‘டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது’ என்று கனிமொழி கூறியதாக வதந்தி

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு அன்வர் ராஜா எதிர்ப்பு தெரிவித்ததாலலேயே அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறி ஏபிபி நாட்டின் நியூஸ்கார்ட் வைரலானதைத் தொடர்ந்து, வைரலாகும் நியூஸ்கார்டை ஏபிபி நாடு வெளியிட்டதா என அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்ட ஒன்று என்பதை நம்மால் அறிய முடிந்தது. அன்வர் ராஜா நீக்கம் குறித்து ஏபிபி நாடு நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தது.

Archive Link

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனைத் தொடர்து ஏபிபி நாட்டின் ஆசிரியர் மனோஜ் பிரபாகரைத் தொடர்புக்கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டோம். அவரும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதுதான் என்பதை நமக்கு உறுதி செய்தார்.

Also Read: புதிய வகை கொரோனா பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடல் என்றாரா அன்பில் மகேஷ்?

Conclusion

பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதாக  சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Manoj Prabakar, Editor, ABP Nadu

ABP Nadu


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular