Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: வங்கதேசத்தில் இந்து குழந்தையின் நிலை
Fact: வைரலாகும் வீடியோ காசாவில் எடுக்கப்பட்டதாகும்.
பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”நன்றாக பாருங்க பங்களாதேஷில் நம்ம இந்து குழந்தை எப்படி இருக்கு பாருங்க, அந்த குழந்தையின் நிலையை பாருங்கள், அந்த குழந்தையின் அரணை கொடியை எப்படி புடுங்குறான் பாருங்கள், ஹிந்துவே தூங்காதே .” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வயநாடு நிலச்சரிவில் இறந்தநிலையில் தன்னுடைய குழந்தையை அணைத்துள்ள தாய் என்று பரவும் AI புகைப்படம்!
பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த ஜூலை மாதம் இந்த வீடியோ CBC News உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் “Video captures aftermath of Israeli airstrike in Gaza” என்று இடம்பெற்றுள்ளது.
மேலும், வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள குழந்தையின் புகைப்படம் bnfs உள்ளிட்ட ஊடகங்களிலும் கடந்த ஜூலை மாதமே காசா தாக்குதல் தொடர்பான செய்தியில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வைரல் வீடியோவில் Aljazeera லோகோ இடம்பெற்றிருந்த நிலையில் நம் தேடலில் “Fear and panic of a child sitting alone after an Israeli bombing targeted a center to shelter the displaced in the UNRWA #أبو_عريبان school in the Nuseirat camp.” என்று Aljazeera Mubasher Channel வெளியிட்டிருந்த இந்த வீடியோ காட்சி நமக்குக் கிடைத்தது.
இதன்மூலம், வைரலாகும் வீடியோவிற்கும் பங்களாதேஷிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பது உறுதியாகிறது.
பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Report from bnfsj, Dated July 17, 2024
Twitter Post From, @ajmubasher
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 3, 2025
Vijayalakshmi Balasubramaniyan
May 7, 2025
Vijayalakshmi Balasubramaniyan
December 9, 2024