Fact Check
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் புர்கா அணிந்து விளையாடுவதாக பரவும் புகைப்படம் உண்மையா?
Claim
புர்கா அணிந்து விளையாடிய வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியினர்
Fact
வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடுவதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”பங்களாதேஷ் இந்தியாவ விட முன்னேறிச்சின்னு இந்த மர்ம நபர்கள் & திமுக உபிஸ்க உருட்டுறது உண்மை தான் போல… கிரவுண்ட்ல கொசு மருந்து அடிக்கிறவங்களுக்கு கூட புல்லா கவர் பண்ற யூனிபார்ம் கொடுத்துருக்காங்னுங்க” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தலைவன் என்று சொல்லிக்கொள்ள விஜய்க்கு தகுதியில்லை என்று விமர்சித்தாரா இயக்குநர் சேரன்?
Fact Check/Verification
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடுவதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தில் Jhelik மற்றும் Supta என்கிற விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்கள் விளையாடிய காட்சி ICC அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்கள் இருவருமே கிரிக்கெட்டிற்கான வங்க தேச ஜெர்சியை அணிந்திருப்பது நமக்கு உறுதியாகியது.
மேலும், வைரலாகும் புகைப்படத்தின் ஓரத்தில் Gemini AI லோகோ இடம்பெற்றிருப்பதையும் நம்மால் காண முடிந்தது.

எனவே இந்த புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு உறுதியாகியது.
Conclusion
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியினர் புர்கா அணிந்து கிரிக்கெட் விளையாடுவதாகப் பரவும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X Post from, ICC, October 10, 2025
ICC Cricket Website