Fact Check
வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கவலைக்கிடம் என்று பரவும் செய்தி உண்மையா?
Claim
வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கவலைக்கிடம்
Fact
வைரலாகும் தகவல் தவறானதாகும். முன்னாள் வங்க தேச பிரதமர் கலிதா ஜியாவே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடல்நிலை கவலைக்கிடம் என்று செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உடல் நிலை கவலைக்கிடமென தகவல்.. நுரையீரல் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு தீவிர சிகிச்சை” என்று பாலிமர் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சமூக ஊடகங்களில் வெளிவந்த இத்தகவலின் உண்மைத்தன்மை குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாரா விஜய்?
Fact Check/Verification
வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உடல்நிலை கவலைக்கிடம் என்று பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் தகவல் குறித்து ஷேக் ஹசீனா உடல்நிலை உள்ளிட்ட கீ-வேர்டுகள் மூலமாக ஆராய்ந்த போது Dhaka Tribune வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்தது. அதில், வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா உடல்நிலை கவலைக்கிடம் என்கிற செய்தி இடம்பெற்றிருந்தது.

மேலும், அவருடைய மகனும், Bangladesh Nationalist Party கட்சித்தலைவருமான தாரிக் ரஹ்மான் தன்னுடைய தாயாரும், முன்னாள் வங்க தேச பிரதமருமான கலிதா ஜியா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நுரையீரல் தொற்று காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக Aljazeera, Deccanherald உள்ளிட்ட ஊடகங்களிலும் இந்த செய்தி இடம்பெற்றுள்ளது. கலிதா ஜியாவிற்கு பதிலாகவே மற்றொரு முன்னாள் வங்க தேச பிரதமரான ஷேக் ஹசீனா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் தவறாக பரவி வருகின்றன.

வங்கதேசத்தில் கடந்த 1991-1996 மற்றும் 2001-2006 ஆகிய காலகட்டங்களில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. இந்நிலையில், தவறுதலாக இவருக்கு பதிலாக கடந்த ஆண்டு வங்க தேசத்தில் நடைபெற்ற வன்முறையைத் தொடர்ந்து இந்தியாவை தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா மருத்துவமனையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Also Read: தவெக தலைவர் விஜய் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்புக்குப்பின் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளாரா?
Conclusion
வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கவலைக்கிடம் என்று பரவும் செய்தி தவறானது; உண்மையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது மற்றொரு முன்னாள் பிரதமரான கலிதா ஜியா என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report from, Aljazeera, Dated November 30, 2025
Facebook Post from, Tarique Rahman, Dated November 29, 2025
News Report from, Deccanherald, Dated November 28, 2025