Claim
வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு, கைவிரல்கள் துண்டிக்கப்பட்டது.

Also Read: 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact
வங்கதேசத்தில் இந்து இளைஞரின் நாக்கு, கைவிரல்கள் துண்டிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் வெனிசுலா நாட்டை சார்ந்த பப்லிசா ஒஸ்தோஸ் (Pableysa Ostos) எனும் பத்திரிக்கையாளர் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இளைஞர் குறித்து ஜனவரி 14, 2019 அன்று பதிவு ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.
அப்பதிவில் வெனிசுலா நாட்டின் பொலிவர் பகுதியில் அந்த இளைஞரின் நாக்கு மற்றும் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டும், இரண்டு கண்களும் தோண்டப்பட்டும் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் பெயர் லியோசர் ஹொசே லூகோ மெய்ஸ் (Leocer José Lugo Maíz) என்றும், அவர் ராணுவத்திலிருந்து அறிவிப்பின்றி வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து தேடியதில் டெய்லி ஸ்டார் எனும் ஊடகத்திலும் இதுக்குறித்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இச்செய்தியில் சட்டத்துக்கு புறம்பான தங்கச் சுரங்கத்துக்கு அருகில் ராணுவ வீரர்கள் ரோந்து செல்லும்போது மெய்ஸ் பிடிபட்டதால், அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவத்திற்கும் வங்கதேசத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதும், இச்சம்பவம் 2019 ஆம் ஆண்டில் வெனிசுலா நாட்டில் நடந்தது என்பதும் தெளிவாகின்றது.
Also Read: வங்கதேச இஸ்லாமியர் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பரவும் படம் உண்மையானதா?
Result: False
Sources
X post from Pableysa Ostos, Journalist, Dated January 14, 2019
Report from Daily Star, Dated January 14, 2019
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.