Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
‘ஐ லவ் மகாதேவ்’ எனும் பெயரில் உ.பி.யில் தீப்பந்த பேரணி நடந்தது.
இத்தகவல் தவறானதாகும். ராஜஸ்தானின் ஜாலவார் பகுதியில் அரசு பள்ளி இடிந்து விழுந்ததில் மரணித்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கேட்டு ஜெய்ப்பூரில் நடந்த தீப்பந்த பேரணி வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள ராவத்பூரில் நடந்த மிலாது நபி விழாவில் ‘ஐ லவ் முகமது’ என்ற வாசகத்துடன் மின்சாரப் பலகை நிறுவப்பட்டது. இந்தப் பலகை மிலாது நபி ஊர்வலத்திலும் எடுத்துச் செல்லப்பட்டது. இதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடந்து அப்பலகை எடுக்கப்பட்டது.
இதையடுத்து வகுப்புவாதத்தை தூண்டியதாக அடையாளம் தெரியாத 15 பேர் உட்பட 24 பேர் மீது உ.பி. காவல் துறை வழக்குப்பதிவு செய்தது. இது சமூக ஊடகங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் ‘ஐ லவ் முகமது’ சர்ச்சை நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உத்திரப் பிரதேசத்தில் ஐ லவ் மகாதேவ் என்ற பெயரில் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் போலீசாரையும் ஆதரித்து பொதுமக்கள் தீப்பந்தத்துடன் பேரணி சென்றதாகவும், அந்த பேரணியில் “யோகி போலீசே நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் முன்னேறு” என்கிற கோஷம் எழுப்பப்பட்டதாகவும் கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோ உண்மையானதா?
உத்திரப் பிரதேசத்தில் ஐ லவ் மகாதேவ் எனும் பெயரில் தீப்பந்த பேரணி நடந்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்த உண்மையறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் ‘rajasthandekh0’ எனும் பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் இதே வீடியோ செப்டம்பர் 26 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவில் இந்த பேரணியானது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்பேரணியானது ராஜஸ்தானின் ஜாலவாரில் அரசு பள்ளி இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட குழுந்தைகளுக்கு நியாயம் கேட்டு நடப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் வேறு சமூக ஊடகப் பதிவுகளிலும் இதே தகவலுடன் இவ்வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அப்பதிவுகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் ராஜஸ்தான் அரசியல்வாதியான நரேஷ் மீனா என்பவரின் ஃபேஸ்புக் பக்கத்தில், ஜாலவாரில் விபத்தில் மரணித்தவர்களுக்காக அவரது மகன் அனிருத் தலைமையில் ஜெய்ப்பூரில் தீப்பந்த பேரணி நடந்ததாக கூறி வீடியோ ஒன்றை நேரலையாக பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அவ்வீடியோவையும் வைரலாகும் வீடியோவையும் ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் வீடியோ ஜெய்ப்பூர் தீப்பந்த பேரணியில் எடுக்கப்பட்டுள்ளது என தெளிவாகியது.

கூகுள் மேப் ஸ்ட்ரீட் வியூவை பயன்படுத்தி ஆராய்கையில் வைரலாகும் வீடியோ ஜெய்ப்பூர் கோபாலபுர பைபாஸ் சாலையில் எடுக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது. வைரலாகும் வீடியோவில் காணப்படும் கமலா டவர் மற்றும் லென்ஸ்கார்ட் போன்றவை கோபாலபுர பைபாஸ் சாலையில் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் ராஜஸ்தான் பேரணி குறித்து NDTV ராஜஸ்தான், ராஜஸ்தான் பத்ரிக்கா, நவ்பாரத் டைம்ஸ் உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்திகளில் இப்பேரணியானது செப்டம்பர் 25 அன்று ஜெய்ப்பூரில் நடந்ததாகவும், ஜாலவாரில் பள்ளி இடிந்து விழுந்த சம்பவத்தில் மரணித்த குழந்தைகளுக்கு நீதி கேட்டு 15 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த நரேஷ் மீனாவின் ஆதரவாளர்கள் இப்பேரணியை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வைரலாகும் வீடியோவில் “உ.பி. போலீஸ் முன்னேறுங்கள்! நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்!” “உ.பி. போலீஸ் உங்கள் லத்தியை பயன்படுத்துங்கள்! நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம்!” என்கிற முழுக்கங்கள் முழங்கப்படுவதை கேட்க முடிந்தது.
ஆனால் நரேஷ் மீனா மற்றும் பஞ்சாப் கேசரி ராஜஸ்தான் ஊடகம் வெளியிட்டிருந்த ஃபேஸ்புக் நேரலை வீடியோக்களில் இந்த முழக்கங்கள் ஏதும் இடம்பெறவில்லை. ஆகவே இம்முழக்கம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து தேடினோம்.
அத்தேடலில் தீபக் ஷர்மா என்பவர் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோவில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் முழக்கத்தை அவர் முழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இந்த முழக்கம் குறித்து NDTV செய்தி வெளியிட்டிருப்பதையும் காண முடிந்தது.
இதன்படி பார்க்கையில் தீபக் ஷர்மா வெளியிட்டிருந்த வீடியோவிலிருந்த ஆடியோவை ராஜஸ்தான் தீப்பந்த பேரணியின் வீடியோவுடன் இணைத்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என உறுதியாகின்றது.
உத்திரப் பிரதேசத்தில் அரசுக்கு ஆதரவாக ஐ லவ் மகாதேவ் எனும் பெயரில் பேரணி நடந்ததாக பரவும் வீடியோ தவறானதாகும்.
ராஜஸ்தானின் ஜாலவார் பகுதியில் அரசு பள்ளி இடிந்து விழுந்ததில் மரணித்தவர்களின் குடும்பத்திற்கு நீதி கேட்டு ஜெய்ப்பூரில் நடந்த தீப்பந்த பேரணி வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
இப்பேரணி வீடியோவின் ஆடியோவை மாற்றி எடிட் செய்து வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.
Sources
Instagram Post by the user, rajasthandekh0, dated Sep 26, 2025
Instagram Post by Rajasthan Meena Community, dated Sep 25, 2025
Instagram Post by Udaipurwati ki Jhalak, dated Sep 26, 2025
YouTube Shorts by Mukesh Meena, dated Sep 26, 2025
Report by NDTV Rajasthan, dated Sep 25, 2025
Report by Rajasthan Patrika, dated Sep 26, 2025
Report by NavBharat Times, dated Sep 26, 2025
X Post by Deepak Sharma, dated Sep 27, 2025
YouTube Shorts by NDTV, dated Sep 27, 2025
Google Maps Street View
Report by Hindu Tamil, dated Sep 26, 2025
Report by The Hindu, dated July 25, 2025
இந்த செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது. அச்செய்தியை இங்கே காணலாம்.
Sabloo Thomas
November 12, 2025
Ramkumar Kaliamurthy
October 27, 2025
Ramkumar Kaliamurthy
October 28, 2023