Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதாக பரவும் வீடியோ.
இத்தகவல் தவறானதாகும். நாசிக்கில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்றவர்களை போலீசார் கைது செய்த வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது.
கடந்த வாரம் மும்பையின் குர்லா பகுதியில் இஸ்லாமியர்கள் சிலர் சாலையில் வரும் வாகனங்களில் ‘I love Muhammad’ என்று எழுதப்பட்ட ஸ்டிக்கர்களை ஒட்டினர்.
இந்நிலையில் இச்செயலில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை மும்பை போலீசார் கைது செய்து சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து, அவ்வீடியோ குறித்த உண்மை அறிய, அவ்வீடியோவை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அவ்வீடியோ குறித்து தேடினோம்.
அத்தேடலில் தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல் இணைய ஊடகத்தில் “Video: Nashik Police Parade Gang Members Who Held Rally After Murder Accused’s Release” என்று குறிப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

வீடியோ குறித்து அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது; மகாராஷ்டிராவின் நாசிக் நகரத்தில் கொலை குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிகழ்வை அவரது கூட்டாளிகள் சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டாடியுள்ளனர்.
அத்தருணத்தின்போது கையில் ஆயுதங்களுடன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இவற்றையெல்லாம் வீடியோவாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளனர்.
இதன் காரணமாகவே நாசிக் நகரத்தின் போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய 21 பேரை கைது செய்து, அவர்களை பொது மக்கள் பார்க்கும் வகையில் ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர்.
தொடர்ந்து தேடுகையில் ABP மாஜா ஊடகத்தின் யூடியூப் பக்கத்திலும் இச்சம்பவம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் மராத்தி NDTV, டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி வீக் உள்ளிட்ட ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
தொடர்ந்து தேடுகையில் இச்சம்பவம் குறித்து ஊடகங்களில் வந்த செய்தியை நாசிக் போலீசார் அவர்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.
கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோவுக்கும் ‘I love Muhammad’ விவகாரத்திற்கும் தொடர்பில்லை என உறுதியாகின்றது.
இதனை தொடர்ந்து மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டனரா என தேடினோம். அதில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.
Also Read: தவெக தொண்டர்களை தெருநாய் என்று குறிப்பிட்டு அட்டைப்படம் வெளியிட்டதா விகடன்?
மும்பையில் வாகனங்களில் ‘I love Muhammad’ ஸ்டிக்கர் ஒட்டிய இஸ்லாமியர்களை போலீசார் கைது செய்ததாக பரவும் வீடியோ தவறானதாகும்.
நாசிக்கில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்றவர்களை போலீசார் கைது செய்த வீடியோவே இவ்வாறு பரப்பப்படுகின்றது
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report by The Free Press Journal, dated October 3, 2025
YouTube Video by ABP Majha, dated September 30, 2025
Report by NDTV Marathi, dated October 1, 2025
Report by Times of India, dated October 2, 2025
Report by The Wire, dated October 4, 2025
Facebook Post by Nashik City Police, dated October 1, 2025
Ramkumar Kaliamurthy
August 8, 2025
Vijayalakshmi Balasubramaniyan
August 4, 2025
Vasudha Beri
July 25, 2025