Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: பங்களாதேஷில் கல்லூரி படிக்கும் ஹிந்து பெண் தாக்கப்படும் வீடியோ
Fact: வைரலாகும் வீடியோ மாணவி ஒருவரின் தற்கொலையைத் தொடர்ந்து சித்தரிக்கப்பட்ட தெரு நாடகமாகும்.
வங்கதேசத்தில் இந்து இளம்பெண் ஒருவர் தாக்கப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“பங்களாதேஷ் கலவரம்..இதை மறைக்க திருட்டு திராவிடியா காங்கிரஸ் நாய்கள் ஒலிம்பிக் பத்தி பேசி திசை திருப்பறானுங்க.. பங்களாதேஷ்ல கல்லூரி படிக்கும் ஹிந்து பெண் தாக்கப்படும் வீடியோ? இதுதான் அமேதி மார்க் பந்து.. உலகின் முதல் தீவிரவாதி ஹிந்து என்று சொன்ன நாயை எங்காவது பாத்தீங்களா..?” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பங்களாதேஷில் இந்து குழந்தையின் நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?
வங்கதேசத்தில் இந்து இளம்பெண் ஒருவர் தாக்கப்படுவதாகப் பரவும் வீடியோ காட்சி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை ஆராய்ந்தபோது அதில் இடம்பெற்றிருந்த பெங்காலி வார்த்தை ஒன்று நமக்குக் கிடைத்தது. அது ஜெகந்நாத் பல்கலைக்கழகம் என்கிற வார்த்தை என்பதை நம்மால் அறிய முடிந்தது.
நம்முடைய தொடர் தேடலில் கடந்த மார்ச் மாதம், சேனல் 24 வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று நமக்குக் கிடைத்தது. அதில் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள இளம்பெண்ணின் காட்சி இடம்பெற்றிருப்பது நமக்குத் தெரிய வந்தது.
கடந்த ஜூலை 31, 2024 அன்று The News வெளியிட்டிருந்த செய்தியின்படி வைரலாகும் வீடியோவில் இடம்பெற்ற நபர் திரிஷ்னா என்கிற மாணவி என்பதையும் அறியமுடிந்தது. அவந்திகா என்கிற மாணவியின் தற்கொலையைத் தொடர்ந்து அவருக்காக நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியபோது இந்த தெரு நாடகம் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
JNU Short stories என்கிற சமூக வலைத்தளப்பக்கத்தில் வைரல் வீடியோ இடம்பெற்றிருந்ததுடன், “The girl is a regular student of Jagannath University in the academic year 2021-22. This video is the scene of the path play as a protest against Avantika’s suicide a few days ago!,” என்று பதிவும் இடப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட வீடியோவே தற்போது வங்கதேசத்தில் இளம்பெண் தாக்கப்படுவதாகப் பரவுகிறது என்பது தெளிவாகியது.
வங்கதேசத்தில் இந்து இளம்பெண் ஒருவர் தாக்கப்படுவதாகப் பரவும் வீடியோ காட்சி சித்தரிக்கப்பட்ட ஒன்று என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
YouTube Video By Channel 24, Dated March 18, 2024
(இந்த கட்டுரை நம்முடைய நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 18, 2024
Vasudha Beri
December 17, 2024
Kushel Madhusoodan
December 13, 2024