Authors
Claim
வங்கதேச இஸ்லாமியர் இந்திய தேசியக் கொடியை அவமதித்தார்.
Also Read: 3000 ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி சிலை என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact
வங்கதேச இஸ்லாமியர் இந்திய தேசியக் கொடியை அவமதித்ததாக பரவும் படத்தை கூர்மையாக கவனித்து பார்க்கையில், அப்படத்திலிருந்தவருக்கு ஒரு கால் குட்டையாகவும் மற்றொன்று நெட்டையாகவும் இருப்பதை காண முடிந்தது. நெட்டையான் காலில் விரல்கள் ஒழுங்கற்ற முறையில் இருப்பதையும் காண முடிந்தது.
அதேபோல் அவர் அணிதிருந்த பேண்டில் தேவையில்லாமல் ஒரு துணி இருந்தது. அவர் கையில் வைத்திருந்த வங்கதேச கொடியிலிருந்த மடிப்பு இடையில் காணாமல் போயிருந்தது.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் படம் Ai மூலம் உருவாக்கப்பட்ட படம் என நம்மால் உணர முடிந்தது.
இதை உறுதி செய்ய TrueMedia , Hive Moderation உள்ளிட்ட Ai சோதிக்கும் தளங்கள் வழியாக வைரலாகும் படத்தை சோதித்தோம். இத்தளங்களும் வைரலாகும் படம் Ai மூலம் உருவாக்கப்பட்ட படம் என்பதை உறுதி செய்தது.
Also Read: மாட்டிறைச்சி உண்பது குறித்து மாற்றி மாற்றி பேசினாரா திருமாவளவன்?
Result: Altered Photo
(இச்செய்தியானது நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் ஏற்கனவே பிரசுரமாகியுள்ளது)
Sources
TrueMedia Website
Sightengine Website
Hive Moderation Website
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.