ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஉத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் தவறான வீடியோத்தகவல்!

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் தவறான வீடியோத்தகவல்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோ

Fact: இத்தகவல் தவறானதாகும். இச்சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்ததாகும். நிலத்தகராறு காரணமாக இந்த வன்முறை நடந்துள்ளது.

“ஆர்எஸ்எஸ்-ன் கைக்கூலி பாசிச மத வெறி பாஜக, மோடி, அமித்ஷா சங்கிகள் தலைமையில் உத்திரபிரதேஷ்ல் ஆளும் மதவெறி பிடித்த யோகி ஆதித்யநாத் சங்கிகளின் காவிகள் ஒரு முஸ்லிமை நடுரோட்டில் அடித்து துடிக்கவிடும் வேதனையான காட்சி பார்ப்பதற்கு மனம் சகிக்கவில்லை. அந்த முஸ்லிம் அல்லாஹ் அல்லாஹ் என்று கதறி துடிக்கும் வேதனையான காணொளி. இதைக் காணும் மக்களே சிந்தியுங்கள்! மோடியின் மதவெறி கூட்டங்களை இந்த நாட்டை விட்டு ஆட்சி அதிகாரங்களில் இருந்து துரத்தி அடிக்கும் வரை ஓயாதீர்கள்.

இந்திய மக்கள் மத நல்லிணக்கத்துடன் சகோதரத்துவத்துடன் நல்லாட்சி நடைபெறும் காங்கிரஸ் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள், அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோ

Facebook Link

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோ

Facebook Link

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோ

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மோடியை விமர்சித்தால் உங்கள் சேனல் இருக்காது என்று மிரட்டினாரா அண்ணாமலை?

Fact Check/Verification

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலில் @saibollineni எனும் பயனர் ஐடியுடைய எக்ஸ் கணக்கில் வைரலாகும் இதே வீடியோ 2021 ஆண்டில் பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

வீடியோவில் காணப்படும் இச்சம்பவம் ஆந்திரப்பிரதேசத்தின் தும்மலச்செருவு பகுதியில் நடந்ததாகவும், தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்த் சைதா என்பவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் தாக்குவதாகவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோ

இதனையடுத்து தேடுகையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சிவா ரெட்டி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்து சிறையில் அடைத்ததாக பல்நாடு மாவட்ட போலீசார் இப்பதிவிற்கு பதிலளித்திருப்பதை காண முடிந்தது.

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோ

தொடர்ந்து தேடுகையில் இச்சம்பவம் குறித்து பல்நாடு போலீசாரின் வேறு சில டிவீட்கள் நமக்கு கிடைத்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; 

“இச்சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான சைதா என்பவர் சிவா ரெட்டி என்பவரை நிலத்தகராறு காரணமாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக சைதா மீது 20/10/2021 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பகையை மனதில் வைத்துக்கொண்டு சிவா ரெட்டி தும்மலச்செருவு டோல் பிளாசா பகுதியில் வைத்து சைதாவை 21/11/2021 அன்று திருப்பித் தாக்கியுள்ளார். இது தொடர்பாக சிவா ரெட்டி மீது  வழக்கு பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.”

மேலும் ‘இந்த வன்முறை சம்பவத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் தொடர்பும் இல்லை; நிலப்பிரச்சனை மட்டுமே உள்ளது’ என்றும் பல்நாடு போலீசார் தெரிவித்துள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோ

தொடர்ந்து தேடுகையில் ஆந்திர அரசின் factcheck.ap.gov.in இணையத்தளத்தில் “Misleading! Land Dispute Being Labelled As Political Attack On Social Media Platforms. Busted!” என்று தலைப்பிட்டு இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.  அச்செய்தியிலும் இச்சம்பவம் நிலத்தகராறு காரணமாகவே நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் அண்மையில் நடந்ததல்ல; 2021 ஆம் ஆண்டில் நடந்தது.
  2. இச்சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் நடந்ததல்ல; ஆந்திராவில் நடந்தது.
  3. இச்சம்பவத்திற்கும் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; நிலத்தகராறு காரணமாகவே இந்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது.   

 Also Read: ராமநாதபுரத்தை பாவபூமி என்றாரா பிரதமர் மோடி?

Conclusion

உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோத்தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது உரிய ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from the user, @saibollineni, Dated November 24, 2021
Reply Tweet from PALNADU DISTRICT POLICE, Dated November 25, 2021
Tweets from PALNADU DISTRICT POLICE, Dated November 25, 2021
Report from factcheck.ap.gov.in, Dated November 24, 2021

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular