Claim: உத்திரப்பிரதேசத்தில் பாஜகவினர் முஸ்லீமை அடித்ததாக பரவும் வீடியோ
Fact: இத்தகவல் தவறானதாகும். இச்சம்பவம் ஆந்திரப் பிரதேசத்தில் நடந்ததாகும். நிலத்தகராறு காரணமாக இந்த வன்முறை நடந்துள்ளது.
“ஆர்எஸ்எஸ்-ன் கைக்கூலி பாசிச மத வெறி பாஜக, மோடி, அமித்ஷா சங்கிகள் தலைமையில் உத்திரபிரதேஷ்ல் ஆளும் மதவெறி பிடித்த யோகி ஆதித்யநாத் சங்கிகளின் காவிகள் ஒரு முஸ்லிமை நடுரோட்டில் அடித்து துடிக்கவிடும் வேதனையான காட்சி பார்ப்பதற்கு மனம் சகிக்கவில்லை. அந்த முஸ்லிம் அல்லாஹ் அல்லாஹ் என்று கதறி துடிக்கும் வேதனையான காணொளி. இதைக் காணும் மக்களே சிந்தியுங்கள்! மோடியின் மதவெறி கூட்டங்களை இந்த நாட்டை விட்டு ஆட்சி அதிகாரங்களில் இருந்து துரத்தி அடிக்கும் வரை ஓயாதீர்கள்.
இந்திய மக்கள் மத நல்லிணக்கத்துடன் சகோதரத்துவத்துடன் நல்லாட்சி நடைபெறும் காங்கிரஸ் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள், அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
