ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkபாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆபாசப் படம் எடுத்ததாக பரவும் எடிட் நியூஸ்கார்டு!

பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் ஆபாசப் படம் எடுத்ததாக பரவும் எடிட் நியூஸ்கார்டு!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் என்பவர் ஆபாசப் படம் எடுத்ததாக புகார்.

Fact: வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்யப்பட்டதாகும்.

“பெண்களை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டதாக பாஜக ஊராட்சி தலைவர் மீது புகார். கடலூர், பண்ருட்டி அருகே உள்ள சேமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் மீது போலீசில் புகார் “ என்று குறிப்பிட்டு நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் என்பவர் ஆபாசப் படம் எடுத்ததாக புகார் பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@Anti_CAA_23

Twitter Link | Archived Link

பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் என்பவர் ஆபாசப் படம் எடுத்ததாக புகார் பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/augustin.daniel1

Facebook Link

பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் என்பவர் ஆபாசப் படம் எடுத்ததாக புகார் பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/Venmani Venmani Mani Vck

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நுழைய அனுமதிக்கப்படவில்லையா?

Fact Check/Verification

பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் என்பவர் ஆபாசப் படம் எடுத்ததாக புகார் வந்திருப்பதாக வைரலாகும் நியூஸ்கார்டில் ‘பாஜக ஊராட்சி தலைவர் மீது புகார்’  எனும் வாசகம் மட்டும் வேறு எழுத்துருவில் (Font) இருப்பதை காணும்போதே இது எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

இருப்பினும் பலர்  இந்த நியூஸ்கார்டை உண்மை என்று நம்பி பகிர்ந்து வருவதால் இதுக்குறித்து முழுமையாக ஆய்வு செய்து தெளிவுப்படுத்த விரும்பினோம்.    

வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் தந்தி தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளர் வினோத்குமாரை தொடர்புக் கொண்டு விசாரித்தோம்.

அவர், “வைரலாகும் நியூஸ்கார்டானது எடிட் செய்து மாற்றப்பட்டுள்ளது. உண்மை நியூஸ்கார்டில் நாங்கள் பாஜக என்று குறிப்பிடவில்லை. ஊராட்சி ஒன்றிய தலைவர் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தோம். இது எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளது”என்று தெரிவித்தார்.

கூடவே உண்மையான நியூஸ்கார்டின் டிவிட்டர் லிங்கையும் நம்முடன் பகிர்ந்திருந்தார். அந்த நியூஸ்கார்டில் அவர் குறிப்பிட்டதுபோலவே ஊராட்சி ஒன்றிய தலைவர் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது. எந்த கட்சியின் பெயரும் குறிப்பிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள மணிவண்ணன் பாஜகவை சார்ந்தவரா என விசாரிக்கையில், அவர் பாஜகவை சார்ந்தவரல்ல, திமுகவை சார்ந்தவர் என்று பதிலளித்தார்.

தொடர்ந்து தேடுகையில் இச்சம்பவம் குறித்து நியூஸ் ஜே வெளியிட்டிருந்த செய்தியிலும் சம்மந்தப்பட்ட நபர் திமுகவை சார்ந்தவர் என்றே கூறப்பட்டிருப்பதை காண முடிந்தது.

நமக்கு கிடைத்தை ஆதாரங்களின்படி தெளிவாகுவது என்னவென்றால்,

  1. வைரலாகும் நியூஸ்கார்டு எடிட் செய்து மாற்றப்பட்டதாகும்.
  2. இச்சம்பவத்தில் தொடர்புடையவர் பாஜகவை சார்ந்தவர் அல்ல.

Also Read: கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தாரா ஈபிஎஸ்?

Conclusion

பாஜக ஊராட்சி ஒன்றிய தலைவர் மணிவண்ணன் என்பவர் ஆபாசப் படம் எடுத்ததாக புகார் வந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Phone Conversation with SG Suryah, State Secretary, Tamilnadu BJP, Dated June 30, 2023
Phone Conversation with Vinoth Kumar, Digital head, Thanthi TV, Dated June 30, 2023
Report from Thanthi TV, Dated June 28, 2023
Report from News J, Dated June 29, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular