புதன்கிழமை, மே 8, 2024
புதன்கிழமை, மே 8, 2024

HomeFact Checkகொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று...

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தாரா ஈபிஎஸ்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு.

Fact: இத்தகவல் பொய்யானது அதிமுக தரப்பு மறுத்துள்ளது.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Twitter@Amutha74247715

Twitter Link | Archived Link

 கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/Prabha Prabha

Archive Link

 கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்
Screenshot from Facebook/santhoshshivakumar

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு நுழைய அனுமதிக்கப்படவில்லையா?

Fact Check/Verification

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக ஊடகங்களில் இதுகுறித்து செய்தி வந்துள்ளதா என தேடினோம். இதில் அதிமுகவை சேர்ந்த அனுபவ் ரவி என்பவர் கொடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்ததையும், அதை உச்சநீதிமன்றம் 2021 செப்டம்பரில் நிராகரித்ததையும் அறிய முடிந்தது. இதுக்குறித்து பல ஊடகங்களில் செய்தி வந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

இதனை தவிர்த்து சமீபத்தில் வேறு எந்த வழக்கும் அதிமுக தரப்பிலிருந்து போடப்பட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே இதனையடுத்து அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யனை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. இவ்வாறு ஒரு வழக்கை நாங்கள் அளிக்கவே இல்லை” என்று பதிலளித்தார்.

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது மாலை மலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள ஜூன் 27, 2023 அன்று இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை. ஆனால் இதற்கு முந்திய நாளான ஜூன் 26, 2023 அன்று “சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு எதிராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்றை மாலை மலர் வெளியிட்டிருந்தது.

அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட போலி நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

தொடர்ந்து மாலை மலரின் டிஜிட்டல் தலைவர் ரித்தேஷை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்து மாற்றப்பட்டது என்பதை அவரும் உறுதி செய்தார்.

Also Read: இஸ்லாமியர் அணியக்கூடிய தொப்பியுடன் பிரதமர் மோடி இருப்பதாக பரவும் எடிட் படம்!

Conclusion

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை தன்னிடம் விசாரணை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Photo

Our Sources
Report from BBC NEWS Tami, Dated September 7, 2021

Report from Hindu Tamil, Dated September 8, 2021
Report from Dinamani, Dated September 8, 2021
Phone Conversation with Kovai Sathyan, Spokesperson, AIADMK, Dated June 28, 2023

Phone Conversation with Rithesh, Digital Head, Maalai Malar, Dated June 28, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular