Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்திற்குள் நுழைய ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு அனுமதி மறுப்பு
Fact: வைரலாகும் தகவல் தவறான புரிதலுடன் பரவுகிறது.
டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்திற்குள் நுழைய ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகைப்படச் செய்தி ஒன்று பரவி வருகிறது.
”டெல்லியில் உள்ள ஜெகன்நாதர் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சாமி சிலை அருகே செல்ல அனுமதியளிக்காமல் சாதிய பாகுபாடு காட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது” என்று இந்த செய்தி பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: சென்னை விரைவு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!
டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்திற்குள் நுழைய ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
இதுகுறித்து முழுமையாக அறிய வைரலாகும் புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு படங்களின் பின்புலத்தையும் ஆராய்ந்தோம். நம்முடைய ஆய்வில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, சமீபத்தில் கடந்த ஜூன் 20, 2023 அன்று டெல்லி ஜெகன்நாதர் ஆலயத்திற்கு சென்றிருந்த நிகழ்வு அவரது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப்பக்கத்தில் புகைப்படங்களாக பகிரப்பட்டிருந்தது.
ஆனால், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஜூலை 12, 2021 அன்று இந்த ஆலயத்திற்கு சென்றுள்ளதாக பதிவிட்டுள்ளார். எனவே, இந்த இரண்டு புகைப்படங்களும் வெவ்வேறு வருடங்களில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.
தொடர்ந்து, டெல்லி ஜெகன்நாதர் ஆலயத்திற்குள் ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதா என்பது குறித்து அறிய அவரது அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசினோம். அதன்படி, டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்திற்குள் நுழையாதது ஜனாதிபதி திரெளபதி முர்முவின் தனிப்பட்ட முடிவு என்று அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஜெகன்நாதர் மீது சிறுவயதில் இருந்தே அளவற்ற பக்தி கொண்ட ஜனாதிபதி திரெளபதி முர்மு, அதனாலேயே கருவறைக்குள் நுழைய விரும்பவில்லை; வெளியில் இருந்தே தரிசனம் செய்ய விரும்பினார் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், இது தொடர்பாக டெல்லி ஜெகன்நாதர் ஆலயத்தின் ஸ்ரீ நீலாச்சல் சேவா சங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஜனாதிபதி திரெளபதி முர்மு அவரது பிறந்தநாளையொட்டி அன்று காலையே ஜெகன்நாதர் தரிசனத்திற்கு வந்தார் என்றும், வெளியில் இருந்தே ஜெகன்நாதரை தரிசிக்க ஜனாதிபதியே முடிவு செய்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், Chherapana நிகழ்வு தவிர மற்ற நேரங்களில் அனைத்து பக்தர்களுமே ஜெகன்நாதரை வெளியில் இருந்தே தரிசிக்க முடியும். ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் Chherapana நிகழ்வின்போதே ஜெகன்நாதரை தரிசித்தார். ஆனால், இந்த இரண்டு புகைப்படங்களும் இணைக்கப்பட்டு தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது. மேலும், ஜனாதிபதியை யாரும் உள்ளே செல்லக்கூடாது என்று தடுக்கவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.
இவற்றுடன் கூடவே, ஜனாதிபதி திரெளபதி முர்முவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை எழுதிய சந்தீப் சாஹுவின் ட்விட்டர் பதிவும் ஜனாதிபதிக்கு அனுமதி மறுக்கப்படவில்லை என்பதாகவே உறுதி செய்தது.
Also Read: சிறுபான்மையினர் குறித்த அமெரிக்க பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றாரா பிரதமர் மோடி?
டெல்லி ஜெகன்நாதர் ஆலய கருவறை உட்பிரகாரத்திற்குள் நுழைய ஜனாதிபதி திரெளபதி முர்முவிற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் பரவும் செய்தி தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
President Of India‘s tweet
Ashwini Vaishnaw‘s tweet
Zee24 Ghanta report, 20June 2023
Telephonic conversation with President’s office & Hauz Khas Jagannath Mandir authority
(இக்கட்டுரை முதலில் நியூஸ்செக்கர் இந்தி மற்றும் வங்காள மொழியில் வெளியாகியது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)