தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்று செய்தி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார்” போட்றா வெடிய என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்று பரவும் செய்தி வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க நேர்ந்தால் அண்ணாமலை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வீடியோ ஒன்று பரவும் நிலையில் அதனை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
வைரலாகும் செய்தி NewsTamil 24X7 யூடியூப் பக்கத்தில் கடந்த பிப்ரவரி 05, 2025 அன்று “தமிழக பாஜக தலைவர்.. அடுத்த 3 ஆண்டுகளுக்கு.. வெளியான முக்கிய தகவல்” என்கிற தலைப்பில் இந்த செய்தி வெளியாகியிருந்தது. மேலும், இதுகுறித்த செய்தியும் பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது.
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக பதவியில் தொடர்வார் என்று இரண்டு மாதங்களுக்கு முன்பாக வெளியாக செய்தியே தற்போதைய ஒன்று போல பரவி வருகிறது.
Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
Conclusion
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என்று பரவும் செய்தி வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் வெளியான பழைய செய்தி என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video From, NewsTamil 24X7, Dated Februry 05, 2025
Report From, ABP Nadu, Dated Februry 04, 2025