Claim: ‘எடப்பாடி அண்ணே! தெரியாம பேசிட்டேன்..’ என அண்ணாமலை குறித்து பாஜகவினர் சுவரொட்டி ஒட்டினர்.
Fact: வைரலாகும் சுவரொட்டி எடிட் செய்யப்பட்டதாகும்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, அதிமுக – பாஜகவுக்கு இடையேயான கூட்டணி முடிவுற்றதாக தெரிவித்தார். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூட்டணி தர்மத்தை மீறி ஜெயலலிதா, அண்ணா போன்ற தலைவர்களை சிறுமைப்படுத்தி பேசியதே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “என்ன பண்ண நானு, எதோ தெரியாம பேசிட்டேன்,சின்ன பையன் நீங்க மன்னிக்க கூடாதா? இதுக்கு மேல நா பேசினால், எடப்பாடி அண்ணே என்ன நீங்க செருப்பாலயே அடிங்க நான் ஏத்துக்கிறேன்” என்று குறிப்பிட்டு பாஜகவினர் சுவரொட்டி ஒட்டியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
Fact Check/Verification
‘எடப்பாடி அண்ணே! தெரியாம பேசிட்டேன்..’ என அண்ணாமலை குறித்து பாஜகவினர் சுவரொட்டி ஒட்டியதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, கூகுள் லென்ஸை பயன்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில், “முற்றும் மோதல்: “ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான்”..அதிமுக போஸ்டருக்கு பதிலடி கொடுத்த பாஜக..!!” என்று தலைப்பிட்டு தினகரன் செய்தி ஒன்றை வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் “ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது வீச்சுதான்” என திரைப்பட வசனத்தை குறிப்பிட்டு மதுரையில் பாஜகவினர் கவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கூடவே அந்த சுவரொட்டியின் படத்தையும் அச்செய்தியில் பயன்படுத்தியிருப்பதையும் காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் இந்த சுவரொட்டிக்கு மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்து கண்டன அறிக்கை வெளியிட்டதாக ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. இச்செய்தியிலும் திரைப்பட வசனம் தாங்கிய அந்த சுவரொட்டி இடம்பெற்றிருந்தது.

இதனடிப்படையில் காண்கையில் ‘எடப்பாடி அண்ணே! தெரியாம பேசிட்டேன்..’ என அண்ணாமலை குறித்து பாஜகவினர் சுவரொட்டி ஒட்டியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது.
வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான சுவரொட்டியின் படத்தையும், எடிட் செய்யப்பட்ட சுவரொட்டியின் படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!
Conclusion
‘எடப்பாடி அண்ணே! தெரியாம பேசிட்டேன்..’ என அண்ணாமலை குறித்து பாஜகவினர் சுவரொட்டி ஒட்டியதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
Report from Dinakaran, Dated September 19, 2023
Report from ETV Bharat, Dated September 19, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)