Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பாஜக அமைச்சர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தனி விமானத்தில் பயணித்தார்.
வைரலாகும் வீடியோவில் தலைமை தேர்தல் ஆணையர் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக இந்திய தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தார்.
நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குத்திருட்டு சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில் “ராகுல் காந்தி தரப்பிலிருந்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் “தலைமை தேர்தல் கமிஷனருக்கு ‘ Z ‘ பிரிவு பாதுகாப்பு தோற்று போன மோடி அரசு வழங்கியது. தனி விமானத்தில பாஜக மந்திரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர். பாஜக மந்திரிகள் வேறு தேர்தல் கமிஷனர் வேறு அல்ல. ராகுல் காந்தியை மிரட்டும் தைரியம் இங்கிருந்து தான் பிறக்கிறது…. மக்கள் எழுச்சியே தீர்வு” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பொதுக்கூட்டத்தில் சீமான் பின்னணி ஒலிக்கு வாயசைத்ததாக பரவும் எடிட் வீடியோ!
பாஜக அமைச்சர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தனி விமானத்தில் பயணித்ததாக வீடியோ ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக வைரலாகும் வீடியோவில் தலைமை தேர்தல் ஆணையர் உள்ளாரா என்று ஆராய்ந்தோம். தற்சமயம் ஞானேஷ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக உள்ளார்.

இவரே “ராகுல்காந்தி தரப்பிலிருந்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்று பேசியவர். இதுக்குறித்த செய்தி ரிபப்ளிக் வேர்ல்ட் யூடியூப் பக்கத்தில் வெளிவந்துள்ளது.
ஞானேஷ் குமார் வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக இந்திய தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் இருப்பதை காண முடிந்தது.

இதை தொடர்ந்து தேடுகையில் ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜுவின் எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் வீடியோ ஆகஸ்ட் 9, 2025 அன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
இந்திய தலைமை நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய், மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகர் வந்தததாக அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடன் ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலும் வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் இட்டாநகர் பெஞ்சின் புதிய கட்டிடத்தை இந்திய தலைமை நீதிபதி திறந்து வைக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேர்தல் தலைமை ஆணையர் ஞானேஷ் குமாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதா என தேடினோம். அதில் தற்சமயம் தேர்தல் தலைமை ஆணையராக உள்ள ஞானேஷ்குமாருக்கு இப்பாதுகாப்பு கொடுத்திருப்பதாக எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
ஆனால் இவருக்கு முன் தேர்தல் தலைமை ஆணையராக இருந்த ராஜீவ் குமாருக்கு சென்ற வருடம் இந்திய பொதுத்தேர்தல் நடக்கிவிருந்தபோது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்தி நமக்கு கிடைத்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகுவது யாதெனில்,
Also Read: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இருந்து தெறித்து ஓடிய தவெகவினர் என்ற வீடியோ உண்மையா?
பாஜக அமைச்சர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் தனி விமானத்தில் பயணித்ததாக பரவும் வீடியோ தகவல் தவறானதாகும். ஆனால் தேர்தல் தலைமை ஆணையராக இருந்தவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது உண்மையே.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by Kiren Rijiju, Minister of Parliamentary Affairs and Minister of Minority Affairs, dated August 9, 2025
Media report from Republic World, dated August 17, 2025
Media report from Dinamalar, dated April 10, 2024
Election Commission of India Website
Supreme Court of India Website
Vijayalakshmi Balasubramaniyan
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 24, 2025
Ramkumar Kaliamurthy
November 19, 2025