Fact Check
பொதுக்கூட்டத்தில் சீமான் பின்னணி ஒலிக்கு வாயசைத்ததாக பரவும் எடிட் வீடியோ!
Claim
பொதுக்கூட்டத்தில் சீமான் பின்னணி ஒலிக்கு வாயசைத்தார்.
Fact
உண்மையான வீடியோவின் ஆடியோ மாற்றி வைரலாகும் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
சீமான் நேற்று செஞ்சியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது பாதியிலேயே மேடையிலிருந்து இறங்கி கூட்டத்துக்குள் பாய்ந்தார். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சீமான் மேடையிலிருந்து இறங்கிய பின்னும் அவர் குரல் கேட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. சீமான் மேடையில் நேரடியாக பேசாமல், பதிவு செய்யப்பட்ட ஆடியோவை ஒலிக்கச் செய்துவிட்டு, வாயை மட்டும் அசைத்துள்ளார் என்று கூறி இவ்வீடியோவானது பரப்பப்பட்டு வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வாக்கு திருட்டு சர்ச்சை; பாஜக MLA நந்த் கிஷோர் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டாரா?
Fact Check/Verification
பொதுக்கூட்டத்தில் சீமான் பின்னணி ஒலிக்கு வாயசைத்ததாக பரவும் வீடியோவில் தாய்த்தமிழ் என்று என்கிற யூடியூப் பக்கத்தின் வாட்டர்மார்க் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து அந்த தாய்த்தமிழ் யூடியூப் பக்கத்தில் வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம். அத்தேடலில் அந்த யூடியூப் பக்கத்தில் நேற்று செஞ்சியில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசிய முழு பேச்சும் நேரலையாக வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அந்த நேரலை வீடியோவில் 29:27 நேரத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால் அவ்வீடியோவில் சீமான் மேடையிலிருந்து இறங்கியப்பின் மக்களின் சலசலப்பு சத்தமே ஒலித்தது; வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் சீமான் குரல் ஒலிக்கவில்லை.
தொடர்ந்து தேடுகையில் நாதகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் சீமானின் பேச்சு நேரலையாக வெளியிடப்பட்டிருந்ததை காண் முடிந்தது. அந்த வீடியோவின் 2:52 நேரத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சி இடம்பெற்றிருந்ததது. அந்த வீடியோவிலும் மக்களின் சலசலப்பு சத்தமே ஒலித்தது.
இதனையடுத்து தேடுகையில் புதிய தலைமுறை, ஏபிபி நாடு, நியூஸ் தமிழ் உள்ளிட்ட ஊடகங்களின் யூடியூப் பக்கங்களிலும் சீமான் மேடையிலிருந்து ஆவேசமாக இறங்கியது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
அவ்வீடியோக்களிலும் சீமான் மேடையிலிருந்து இறங்கியப்பின் மக்களின் சலசலப்பு சத்தமே ஒலித்தது; வைரலாகும் வீடியோவில் இருப்பதுபோல் சீமான் குரல் ஒலிக்கவில்லை.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் ஆடியோ உண்மையானது அல்ல; எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்ட போலியான ஆடியோ என உறுதியாகின்றது.
Also Read: ராகுல் காந்தி சட்டைக்குள் பெண்கள் உள்ளாடை அணிந்திருந்ததாக பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
பொதுக்கூட்டத்தில் சீமான் பின்னணி ஒலிக்கு வாயசைத்ததாக பரவும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Thaai Thamizh, dated August 17, 2025
YouTube Video by NTK, dated August 17, 2025
YouTube Video by Puthiya Thalaimurai, dated August 17, 2025
YouTube Video by ABP Nadu, dated August 18, 2025
YouTube Video by News Tamil, dated August 17, 2025