மழைத்தண்ணீர் தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டதாகப் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையால் மாவட்டங்கள் அனைத்தும் மழை நீரில் தத்தளித்து வருகின்றன. குறிப்பாக தலைநகர் சென்னை வழக்கம்போல் கடும் வெள்ளப்பெருக்கால் அவதிக்குள்ளாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், “சென்னையில் கனமழை தொடரும். மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள்” என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டதாகப் புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்றாரா முதல்வர் ஸ்டாலின்?
Fact check/Verification
மழைத்தண்ணீர் தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டதாகப் பரவிய செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அப்போது, தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்த 7 ஆம் தேதியன்று, குறிப்பிட்ட நியூஸ்கார்டில், “சென்னையில் கனமழை தொடரும். சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தகவல்” என்கிற செய்தி இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட அந்த கார்டையே எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து, தந்தி டிவியின் இணை ஆசிரியர் அசோக வர்ஷினியிடம் இந்த நியூஸ் கார்டு குறித்து கேட்டோம். அப்போது அவரும் குறிப்பிட்ட வைரல் கார்டு தந்தி டிவியின் உண்மையான நியூஸ் கார்டினை எடிட் செய்து போலியாக உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நமக்கு உறுதி செய்தார்.
Conclusion:
மழைத்தண்ணீர் தேங்கியதால் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கிய சென்னைவாசிகள் என்று தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டதாகப் பரவிய செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)