முதல்வர் ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை மூடிய டீக்கடைக்காரர் என்பதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.

கடந்த நவம்பர் மாதம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபோது பூவிருந்தவல்லி அருகே டீக்கடை ஒன்றில் டீ அருந்தினார். குறிப்பிட்ட அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவியது.

இந்நிலையில், தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், “ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி” என்பதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
முதல்வர் ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி என்பதாக பரவுகின்ற நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ் கார்டினை பார்த்தபோதே அது கேலிசெய்யும் வகையில் எடிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிந்தது. ஆனால், அதனை உண்மை என்று நினைத்து பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
எனவே, குறிப்பிட்ட நியூஸ் கார்டு ஏபிபி நாடு பெயரில் பரவிய நிலையில் அதுகுறித்து ஏபிபி நாடு ஆசிரியர் மனோஜ் பிரபாகரிடம் கேட்டோம். அப்போது அவர், குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்தார்.
Conclusion
முதல்வர் ஸ்டாலின் டீ குடித்ததில் இருந்து கடை விளங்கவில்லை என்று கடையை நிரந்தரமாக மூடிய டீ கடை முதலாளி என்பதாக பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)