ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkஈரோடு கிழக்கில் திமுகவினரை பொதுமக்கள் விரட்டினரா?

ஈரோடு கிழக்கில் திமுகவினரை பொதுமக்கள் விரட்டினரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக பரவும் வீடியோ

இத்தகவலை பாஜக சமூக ஊடக மாநிலத் தலைவர் சிடிஆர் நிர்மல்குமார் உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக பரவும் வீடியோ
Screengrab from Twitter @CTR_Nirmalkumar
ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக பரவும் வீடியோ
Screengrab from Facebook/ கரூர் மணிகண்டன்
ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக பரவும் வீடியோ
Screengrab from Facebook/ மயிலாடுதுறைமாவட்டம் கொள்ளிடம்கிழக்கு ஒன்றியம்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நீட் தேர்வு கொண்டு வந்ததே திமுகதான் என்று பேசினாரா முதல்வர் ஸ்டாலின்? உண்மை என்ன?

Factcheck / Verification

ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் இந்த வீடியோவானது பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.

சிடிஆர் நிர்மல்குமார்  பதிவிட்ட டிவீட்டின் கமெண்ட் பகுதியில் இவ்வீடியோ பழைய வீடியோ என்று தெளிவு செய்து திமுகவை சேர்ந்த அப்பாஸ் என்பவர் பேசிய வீடியோ பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இவரே வைரலாகும் வீடியோவில் காணப்படும் நபராவார். இவர் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு ஈரோட்டில் நிகழ்வில்லை, அது கோயம்புத்தூரில் நடந்ததாக கூறியுள்ளார்.

தொடர்ந்து தேடியதில் அரசியல் அட்ராசிட்டிஸ் எனும் டிவிட்டர் பக்கத்தில் டிசம்பர் 23, 2022 அன்று இந்த வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இத்தருணத்தில் ஈரோடு கிழக்கில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா உயிருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகின்றது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் தெளிவாகுவது என்னவென்றால், பொதுமக்கள் திமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உண்மையே, ஆனால் இந்நிகழ்வு ஈரோடு கிழக்கில் திமுகவினர் வாக்கு சேகரிக்கும்போது நடந்தது அல்ல.

Also Read: அணு உலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட துருக்கி பூகம்பம் என்று பரவும் 2020 ஆம் ஆண்டு லெபனான் வீடியோ!

Conclusion

ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரிக்க சென்ற திமுகவினரை பொதுமக்கள் விரட்டியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ பழைய வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources

Tweet from Arasiyal atrocities dated December 23, 2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular