Saturday, March 15, 2025
தமிழ்

Fact Check

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை போலீசார் தாக்கினரா?

banner_image

Claim: குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து  போலீசார் தாக்கினர்.

Fact: குடித்துவிட்டு நடைபாதையில் காரை ஓட்டியதாலேயே அந்த இளைஞர்கள் தாக்கப்பட்டனர்.

“குஜராத்தில் அதிவேக பைக் ஒட்டிகளுக்கு உடனடி தண்டனை இன்று முதல்” என்று குறிப்பிட்டு போலீசார் இரண்டு இளைஞர்களை பொது இடத்தில் வைத்து தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@Citizen_6789

Twitter Link | Archived Link

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@P00NGUNDRAN

Archived Link

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரவும் தகவல்
Screenshot from Twitter@SuEswaran

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலை பாதயாத்திரை வாகனத்தில் இரட்டைப் படுக்கை எதற்கு என்று கேள்வி எழுப்பினாரா சீமான்?

Fact Check/Verification

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் போலீசார் தாக்கியதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை கீ ஃபிரேம்களாக பிரித்து, அப்புகைப்படங்களை கூகுள் லென்ஸை பயன்படுத்தி அச்சம்பவம் குறித்து தேடினோம்.

இத்தேடலில், ‘On camera, men involved in drink and drive case beaten up by Gujarat Police’ என்று தலைப்பிட்டு இவ்வீடியோ குறித்து இந்தியா டுடேவில் ஜூலை 25, 2023 அன்று செய்தி வெளிவந்திருப்பதை காண முடிந்தது.

வைரலாகும் வீடியோவில் காணப்படும் இந்த இளைஞர்கள் அதிக அளவில் மதுபானம் அருந்திவிட்டு சாலையோரம் இருக்கும் நடைபாதையில் காரை ஓட்டியுள்ளனர். இவர்களின் செயலால் நடைபாதையில் இருந்தவர்கள் நூலிழையில் உயிர் தப்பியதாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இச்சம்பவமானது குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்துள்ளது.

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரவும் தகவல்
Screengrab from India Today

தொடர்ந்து தேடுகையில் இந்துஸ்தான் டைம்ஸ் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியில் இச்சம்பவத்தில் தொடர்புடைய கேதார் தேவ் (25) மற்றும் அவருடைய மூன்று நண்பர்கள் மீது அதிவேகமாக வாகனம் ஓட்டியது, சேதம் ஏற்படுத்தியது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது ஆகிய குற்றங்களின் கீழ் போக்குவரத்து காவல்துறை வழக்குகள் பதிவு செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக பரவும் தகவல்
Screengrab from Hindustan Times

டைம்ஸ் நம், ரிபப்ளிக் வேர்ல்ட் உள்ளிட்ட ஊடகங்களும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் தெளிவாகுவது யாதெனில், அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றதால் அந்த இளைஞர்களை போலீசார் தாக்கவில்லை; மது குடித்துவிட்டு பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்துதல் ஏற்படும் வகையில் கார் ஓட்டியதாலேயே அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?

Conclusion

குஜராத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை பொது இடத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from India Today, Dated July 25, 2023

Report from Hindustan Times, Dated July 26, 2023
Report from Times Now, Dated July 25, 2023
Report from Republic World, Dated July 26, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.